ஃபீல் குட் மூவியாக வந்திருக்கும் பறந்து போ.. முழு விமர்சனம்

Paranthu Po Movie : இயக்குனர் ராமின் வழக்கமான சீரியஸ் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைக்கும் படமாக உருவாகி இருக்கிறது பறந்து போ. மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுன் ரயன் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படம் இன்று தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் தந்தை மகன் உறவு எப்படி இருக்கிறது என்பதை உணர்ச்சி பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் இந்த படம் வெளிக்காட்டி இருக்கிறது. கோயமுத்தூரில் சிவாவின் மனைவி கிரேஷ் ஆண்டனி வேலை செய்கிறார்.

சென்னையில் சிவாவுக்கு வேலை கிடைத்த நிலையில் தனது மகனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார். நான்கு சுவர்களுக்குள் மட்டுமே இருந்த சிவாவின் மகன் வெளியே செல்ல ஆசைப்படுகிறான். தனது மகனின் விருப்பத்தை ஏற்று சிவாவும் வெளியே அழைத்து செல்கிறார்.

மிர்ச்சி சிவாவின் பறந்து போ விமர்சனம்

அங்கு அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் அனுபவத்தை படமாக கொடுத்திருக்கிறார் ராம். படத்தில் சில காட்சிகளில் மட்டுமே சிவாவின் முன்னாள் காதலியாக வரும் அஞ்சலி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் பாடல்கள் தனியாக இடம்பெறாமல் கதையுடன் ஒன்றி வருகிறது.

இப்போது உள்ள பெற்றோர்களுக்கு ஏற்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்க்கலாம். கிரேஸ் ஆண்டனி சிவாவின் மனைவியாக குளோரி கதாபாத்திரத்தில் தொலைபேசியில் பேசும் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருக்கிறது.

படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களே இல்லாதது கூடுதல் பலமாக இருக்கிறது. இதில் ஒரே ஒரு குறை என்றால் எட்டு வயது குழந்தை ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசுவது நெருடலாக இருக்கலாம். ஆனால் இப்போது உள்ள தலைமுறை நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் படியாக தான் அந்த காட்சியை ராம் வைத்திருக்கிறார்.

மற்றபடி இன்னும் இந்த படத்தின் நீளம் இருக்கக் கூடாதா என்று ஏக்கத்துடன் ரசிகர்கள் தியேட்டரில் இருந்து வரும்படிதான் அமைந்திருக்கிறது. ராமின் பறந்த போ இன்னும் உயரத்தில் பறந்து போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.75/5