கேங்கர்ஸ்க்கு போட்டியாக வந்த சுமோ.. படம் சூப்பரா, சொதப்பலா.? முழு விமர்சனம்

Sumo Movie Review: நேற்று சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் வெளியானது. வழக்கம் போல நல்லா சிரிக்கலாம் என எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தான்.

ஆனாலும் படம் பார்க்கும் ரகம் தான். அதற்கு போட்டியாக இன்று வெளியாகி இருக்கிறது மிர்ச்சி சிவாவின் சுமோ. பல வருட தாமதத்திற்கு பிறகு வெளிவந்துள்ள படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.

மிர்ச்சி சிவா, விடிவி கணேஷ் நடத்தி வரும் ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கிறார். அத்துடன் சேர்த்து கடலில் சர்ஃபிங் செய்வதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.

அப்படி ஒரு நாள் கடலுக்கு செல்லும் போது யோசினோரி டஷிரோ தண்ணீரில் மிதந்து வருகிறார். அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுகிறார் சிவா.

தன் உயிரை காப்பாற்றிய அவரை கடவுளாக பார்க்கிறார் யோசினோரி. அவர் ஜப்பான்காரர் என்பதையும் சுமோ வீரர் என்பதையும் சிவா கண்டுபிடிக்கிறார்.

கேங்கர்ஸ்க்கு போட்டியாக வந்த சுமோ

அவரை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்ப நினைக்கிறார் சிவா. அந்த முயற்சியில் அவர் ஜெயித்தாரா? சுமோ போட்டியில் கலந்து கொள்ளும் யோசினோரி வெற்றி பெற்றாரா? என்பது தான் படத்தின் கதை.

கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையை பொருத்தவரையில் சொதப்பல் தான். காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்க வேண்டிய இடங்களில் கூட சுமார் ரகம் தான்.

இதற்கு படம் ஓடிடியில் வந்திருக்கலாம் என்று கூட ரசிகர்களை நினைக்க வைத்து விடுகிறது. ஆனால் டிஜிட்டலில் கூட படம் கஷ்டப்பட்டு பார்க்கும் நிலை தான்.

அந்த அளவுக்கு திரைக்கதை படு வீக்காக இருக்கிறது. ஆக மொத்தம் அகில உலக சூப்பர் ஸ்டார் கொடுத்த அலப்பறையை நம்பி மொக்கை வாங்கியது தான் மிச்சம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2/5