Mission Impossible 8 Review : 1996 ஆம் ஆண்டு மிஷின் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் தொடங்கிய நிலையில் 2025 இல் அத்தியாயம் முடிந்து இறுதி பாகம் வெளியாகி இருக்கிறது. டாம் க்ரூஸ் தனக்கான ஒரு பிராண்டை உருவாக்கி இந்த சீரிஸை கொண்டு சென்று இருந்தார்.
மிஷின் இம்பாசிபிள் பைனல் ரெக்கனிக் கதையில் ஏஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு உலகை அழித்து அதிலிருந்து மீண்டு வரும் மக்களை வைத்து வேறு ஒரு உலகத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
அதை கதாநாயகன் டாம் க்ரூஸ் எவ்வாறு முறியடித்து உலகை காப்பாற்றுகிறார் என்பது தான் இறுதி அத்தியாயம். மற்ற பாகங்கள் போல இந்த பாகத்திலும் படம் முழுக்க டாம் க்ரூஸ் கவனத்தை ஈர்த்து படத்தை தாங்கி பிடித்துள்ளார்.
மிஷின் இம்பாசிபிள் 8 ரிவ்யூ
படத்தில் ஸ்டென்ட் காட்சிகள், கிளைமாக்ஸ் பக்கா மாஸ் ஆக எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இரு விமானங்கள் ஆகாயத்தில் அந்தர் பல்டி அடிக்கும் காட்சி பிரமிக்க வைத்திருந்தது. படம் முழுக்க தொழில்நுட்பம் என்பதால் எல்லாமே பக்காவாக எடுக்கப்பட்டிருந்தது.
படத்தின் மைனஸ் என்றால் இதற்கு முந்தைய பாகங்கள் பார்க்காத ரசிகர்கள் முதலில் சிறிது நேரம் தடுமாற கூடும். அவர்களுக்கு படம் புரியவே சில மணி நேரம் ஆகிறது. மேலும் ஈத்தன் ஹண்ட் பிளான்கள் எல்லாமே அடுத்தடுத்து நடப்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
மற்றபடி இம்பாசிபிள் சீசன் இதோடு முடிவது ரசிகர்களை கவலையில் அழ்த்தி இருக்கிறது. ஆகையால் கண்டிப்பாக இந்த பாகத்தை யாரும் தவறவிடாமல் பார்த்து மகிழலாம். ஒரு திரில்லரான அனுபவத்தை இந்த படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சினிமா பேட்டை ரேட்டிங் : 3.75/5