நேரடி ஓடிடியில் வெளியான மாதவன், நயன்தாராவின் டெஸ்ட்.. வீக் எண்ட் பார்ப்பதற்கு ஏற்ற படமா.? முழு விமர்சனம்

Test Movie Review: மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில் டெஸ்ட் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. சசிகாந்த் இயக்கியிருக்கும் இப்படம் வீகென்ட் என்ஜாய் செய்வதற்கு ஏற்ற படமா என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.

ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகி இருக்கும் இப்படம் திரில்லர் சஸ்பென்ஸ் கலந்த கலவையாக இருக்கிறது. கதை படி சித்தார்த் கிரிக்கெட் வீரராக வருகிறார்.

சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பது அவருடைய கனவாக இருக்கிறது. அதேபோல் விஞ்ஞானியாக இருக்கும் மாதவன் தண்ணீரிலிருந்து பெட்ரோல் எடுக்க முயற்சிக்கிறார்.

நேரடி ஓடிடியில் வெளியான டெஸ்ட்

அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. மேலும் பொருளாதார சிக்கலிலும் அவர் தவிக்கிறார். அவருடைய மனைவியாக ஸ்கூல் டீச்சராக வருகிறார் நயன்தாரா.

பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் இவர் எப்படியாவது தாயாக வேண்டும் என மருத்துவ உதவியை நாடுகிறார். இந்த மூவரை சுற்றி நடக்கும் கதை தான் டெஸ்ட்.

இதில் சித்தார்த்துக்கு மாதவனால் பெரும் பிரச்சனை வருகிறது. இந்த டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டில் இறுதியாக நடந்தது என்ன என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

செலிபிரிட்டியாக வரும் சித்தார்த் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாத கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். அவரின் மனைவியாக மீரா ஜாஸ்மின் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆனால் மாதவனின் நடிப்புதான் பயங்கர மிரட்டல். முதல் பாதியில் அப்பாவியாகவும் இரண்டாவது பாதியில் அவர் எடுக்கும் வில்லத்தனமும் வேற லெவலில் இருக்கிறது.

அவரின் மனைவியாக நயன்தாரா வழக்கம் போல நடித்துள்ளார். அவருடைய நடிப்பும், மேக் அப், உடை என அனைத்தும் எந்த படம் பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.

பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் இதில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கிரிக்கெட் பெட்டிங் தான் கதைக்களம் என்பதால் திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

ஒரு சில இடங்களில் அது வொர்க் அவுட் ஆகி இருந்தாலும் பல இடங்களில் சோர்வை தருகிறது. அதனால் இரண்டரை மணி நேரம் படத்தை உட்கார்ந்து பார்ப்பது பொறுமையை சோதிக்கிறது.

ஆக மொத்தம் படம் தியேட்டருக்கு வராமல் நேரடி ஓடிடி தளத்தில் வெளியானது புத்திசாலித்தனமான முடிவு தான்.

Leave a Comment