Oppenheimer Movie Review- வரலாற்றை கண்முன் நிறுத்திய கிறிஸ்டோபர் நோலன்.. ஓப்பன்ஹெய்மர் விமர்சனம்

Oppenheimer Movie Review: கிறிஸ்டோபர் நோலனின் ஒவ்வொரு படமுமே புரியாத புதிராக தான் எடுத்திருப்பார். அந்த வகையில் இப்போது ஒவ்வொரு நொடிக்கும் பதட்டம் அளிக்கும் விதமாக ஓப்பன் ஹெயமர் என்ற படத்தை எடுத்திருக்கிறார். வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அமெரிக்காவின் அணு ஆய்வாளரான ராபர்ட் ஓப்பன் ஹெய்மர் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் கதாநாயகனாக பீக்கி ப்ளைண்டர்ஸ் தொடரில் நடித்த சிலியன் மர்ஃபி நடித்திருக்கிறார். மக்களால் தான் ஆக்கமும் உண்டு அதற்கான அறிவும் இருக்கிறது. போர்க்காதல் என அனைத்தையும் படம் கொண்டுள்ளது.

ஹிட்லரின் படை நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்போது அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் இணைந்து அவரை எதிர்த்து போராடி வருகிறார்கள். அப்போது இரு நாடுகளுமே அணு ஆயுதத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அப்போது ஓப்பன் ஹெய்மரின் முயற்சி ஹிட்லரின் நாஜிப்படையினருக்கு எதிராக அமைகிறது.

அதன் பிறகு சொந்த ஊருக்கு திரும்பும் ஓப்பன் ஹெய்மர் ப்ராஜெக்ட் மன்ஹாட்டன் என்னும் திட்டத்தை கொண்டு வருகிறார். மேலும் சுயநல மனிதனால் ஒரு குற்றச்சாட்டு கதாநாயகன் மேல் விழுகிறது. அதன் பின்பு அவர் எப்படி இந்த குற்றச்சாட்டில் இருந்து வெளியில் வருகிறார், அதிபரின் வெள்ளை மாளிகைக்குச் செல்லும்போதே நேருக்கு நேராக அவர் கேட்கும் கேள்விகள் என சுவாரஸ்யமான கதை களத்துடன் இப்படம் எடுக்கப்பட்டு இருகிறது.

படத்தில் அணுகுண்டு பரிசோதனை மேற்கொள்ளும் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்ததால் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. மேலும் கிளைமேக்ஸ் முந்திய 30 நிமிடங்கள் எல்லோரையுமே சீட்டின் நுனிக்கு வர செய்தது. படத்தில் லுட்விக் கோரான்ஸன் இசை கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

படம் முழுக்க வசனங்கள் அதிகமாக இடம் பெற்றிருந்தது. படத்தின் நீளம் 3 மணி நேரத்தை தாண்டி என்பதால் சில இடங்களில் சலிப்பு தட்டியது. ஆனாலும் ஓப்பன் ஹெய்மர் வாழ்க்கையில் எதிர்கொண்ட விஷயங்களை மிகவும் நுணுக்கமாகவும், உணவுப்பூர்வமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அந்த வகையில் ரசிகர்கள் இப்படத்தை திருப்தியுடன் பார்த்து சொல்கிறார்கள்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3/5