Parking Movie Review : மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஐயப்பன் கோஷையும் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சாதாரண கதைக் களமாக இருந்தாலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. அதேபோல் தான் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் படம் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். இந்நிலையில் கதாநாயகி இந்துஜாவை ஹரிஷ் கல்யாண் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த சூழலில் புதிய வீட்டிற்கு இருவரும் குடி போய் உள்ள நிலையில் இந்துஜா கர்ப்பமாகிறார்.
தனது மனைவியை சந்தோஷப்படுத்துவதற்காக ஹரிஷ் கல்யாண் கார் ஒன்றை வாங்குகிறார். அவரின் வீட்டின் கீழே எம் எஸ் பாஸ்கர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த கார் பார்க்கிங் மூலம் ஹரிஷ் கல்யாண் மற்றும் அரசு ஊழியராக இருக்கும் சண்டை முற்றுகிறது.
இந்த வாக்குவாதம் சின்ன பிரச்சனையில் தொடங்கி, பூதாகரமாக வெடிக்கிறது. இதனால் ஹரிஷ் கல்யாண் என்ன விளைவை சந்திக்கிறார் என்பதுதான் பார்க்கிங். படத்திற்கு பக்காவான கதாபாத்திரத்தை இயக்குனர் தேர்ந்தெடுக்கத் இருக்கிறார். எது தேவையோ அதை மட்டும் அழகாக கொடுத்திருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் மற்றும் இந்துஜா மூவருமே தனது சிறந்த நடிப்பை போட்டிருக்கின்றனர். மேலும் இப்போது சமூகத்திற்கு தேவையான கருத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஒரு குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது.
படத்தில் குறைகள் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை. பாடல்கள் பெரிய அளவில் எடுபடவில்லை. மேலும் முதல் பாதி கொஞ்சம் பொறுமையாக நகர்ந்து வருவதால் கதை காண வேகம் ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருக்கிறது. மற்றபடி பார்க்கிங் படு பயங்கரம் தான்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3.75/5