பிரம்மாண்டத்தை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. தீயாக பரவும் ட்விட்டர் விமர்சனம்

ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

ponniyin-selvan
ponniyin-selvan

பொன்னியின் செல்வன் நாவலை படித்த ரசிகர்கள் காட்சியாக இந்த கதை எப்படி இருக்கும் என்பதை காண்பதற்கு ஆவலுடன் காத்திருந்தனர். அதை ஈடுகட்டும் வகையில் மணிரத்தினம் மிகவும் சிறப்பாக இந்த கதையை திரைப்படமாக உருவாக்கி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ponniyin-selvan
ponniyin-selvan

அதிலும் ஏ ஆர் ரகுமான் இசையும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத இயல்பான கதை அமைப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கதைக்கு தேவையில்லாத எந்த காட்சியும் இடம்பெறவில்லை என்றும், அதிகப்படியான போர்க்காட்சிகள், மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாததால் தான் இந்த திரைப்படம் ரசிகர்களை தற்போது கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ponniyin-selvan
ponniyin-selvan

அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் என்ற கனமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ஜெயம் ரவி, படம் முழுக்க பயணிக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி, மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கும் விக்ரம் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக கொடுத்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ponniyin-selvan
ponniyin-selvan

மேலும் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இருவரும் வேற லெவல் நடிப்பை கொடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். படத்திற்கு பக்க பலமாக இருக்கும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசையும், ரவிவர்மாவின் ஒளிப்பதிவும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

ponniyin-selvan
ponniyin-selvan

ஆக மொத்தம் இந்த பொன்னியின் செல்வன் பிரம்மாண்டத்தை மிஞ்சும் வகையில் ரசிகர்களை மிரட்டி இருக்கிறது. இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவில் முக்கிய திரைப்படமாக நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.