தலைவரின் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்தாரா லோகி.? ரஜினியின் கூலி முழு விமர்சனம்

Coolie Movie Review: ஆகஸ்ட் 14 எப்போது வரும் என இந்த ஒரு நாளுக்காக தான் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். லோகேஷ் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள கூலி இன்று ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது.

பாசிட்டிவ் விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க தலைவரை பிடிக்காதவர்கள் நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். உண்மையில் படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காண்போம்.

மேன்ஷன் நடத்தி வரும் ரஜினி தன் நண்பன் சத்யராஜின் இறப்புக்கு பழிவாங்குவது தான் படத்தின் ஒன் லைன். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தங்க கடத்தல் செய்து வரும் நாகர்ஜுனா அவரை எதிர்ப்பவர்களை கொன்று குவிக்கிறார்.

அதே சமயம் சத்யராஜ் இறப்பிற்கு வரும் ரஜினி அவருடைய மரணம் கொலை என்பதை கண்டுபிடிக்கிறார். உடனே தன் நண்பனின் சாவுக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசன் அவருக்கு துணையாக இருக்கிறார்.

ரஜினியின் கூலி முழு விமர்சனம்

இறுதியில் ரஜினி நாகார்ஜுனாவின் இடத்துக்கே செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? சத்யராஜின் மரணம் எதற்காக? ரஜினி சம்மந்தப்பட்டவர்களை பலி வாங்கினாரா? இவர்களின் பிளாஷ்பேக் என்ன? என்பதை தன்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறார் லோகேஷ்.

ஆரம்பத்தில் கதை மெதுவாக தொடங்கினாலும் போகப் போக வேகம் கூடுகிறது. அதிலும் இடைவேளை காட்சிக்குப் பிறகு ஒவ்வொரு சீனும் சரவெடி தான். இத்தனை பெரிய நடிகர்கள் இருக்கிறார்களே சும்மா வந்து செல்வார்களா என்ற நினைப்பு எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் அத்தனை நடிகர்களுக்கும் பவரான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதில் வில்லன் நாகர்ஜுனா வேற லெவலில் கலக்கி இருக்கிறார். அதேபோல் ஸ்ருதிஹாசன் கனமான கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகிறார்.

மேலும் ரஜினியின் டிஏஜிங் காட்சிகள் ரசிகர்களுக்கு செம ட்ரீட். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. மோனிகா பாடல் ஆட்டம் போட வைத்துள்ளது.

அதேபோல் சாதாரண கதையாக இருந்தாலும் தரமான நடிகர்களை இறக்கி அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க வைத்துள்ளார் லோகேஷ். ஆக மொத்தம் கூலி தியேட்டர் சரவெடி.

சினிமா பேட்டை ரேட்டிங்: 4/5