சந்தானம் பேயுடன் போடும் காமெடி ஆட்டம்.. டிடி ரிட்டன்ஸ் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

DD Returns Twitter Review: பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் டிடி ரிட்டன்ஸ். ஏற்கனவே சந்தானம் நடிப்பில் காமெடி அலப்பறையாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது மூன்றாம் பாகம் தான் டிடி ரிட்டன்ஸ் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி அலப்பறையுடன் வெளிவந்துள்ள இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ஒட்டுமொத்த ரசிகர்களும் கூறும் ஒரே விஷயம் ரொம்ப நாளைக்கு பிறகு இப்படி ஒரு காமெடி படத்தை பார்க்கிறோம் என்பதுதான். அந்த அளவுக்கு சந்தானம் தன்னுடைய வழக்கமான பாணியில் இப்படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மேலும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, சைக்கோ சகதிகள் கோடம்பாக்கத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், அடிவயிறு அல்சராகிவிடும் அளவிற்கு ஒரு சிரிப்பு கூட்டணி தந்துள்ள படம் டிடி ரிட்டன்ஸ் என பாராட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குனர் ரொம்பவும் ஸ்மார்ட் ஆக படத்தை இயக்கியுள்ளதாகவும் கருத்துகள் குவிந்து கொண்டிருக்கிறது.

அதிலும் புஷ்பா பட ஐட்டம் பாடலை வைத்து வரும் காமெடி காட்சி தியேட்டரையே சிரிப்பில் அதிர வைத்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி படம் முழுக்க சிரிப்பு சரவெடியாக இருக்கும் இந்த டிடி ரிட்டன்ஸ் சந்தானத்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்யுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →