சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் சிரிப்பு மூட்டியதா.? முழு விமர்சனம்

DD Next Level Movie Review: தில்லுக்கு துட்டு சீரிஸ் வரிசையில் டிடி நெக்ஸ்ட் லெவல் இன்று வெளியாகி இருக்கிறது. ஆர்யா தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.

யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, கௌதம் மேனன், செல்வராகவன் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடித்துள்ளனர். படம் எப்படி இருக்கிறது என ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

முழு விமர்சனம்

இதில் சந்தானம் படத்தை ரிவ்யூ செய்பவராக வருகிறார். இப்போது யூடியூபில் வருபவர்கள் போல் எல்லா படத்தையும் இவர் நெகட்டிவ் விமர்சனம் தான் செய்கிறார்.

இதனால் ஸ்பெஷல் ஷோ போடுகிறோம் என அவர் ஒரு தியேட்டருக்கு வரவழைக்கப்படுகிறார். ஆனால் அவருக்கு முன்பே அவருடைய குடும்பத்தினர் அங்கு சிக்கிக் கொள்கின்றனர்.

பேய்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்த அமானுஷ்ய தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது. அதற்குள் செல்லும் சந்தானம் தன் குடும்பத்தினரை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை.

கதைக்குள் கதை என்பது போல் படத்தில் ஒரு படத்தை வைத்து புது முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். அதிலும் சந்தானம் இப்படத்தில் ஹேர் ஸ்டைல், கெட் அப் என வெரைட்டி காட்டியுள்ளார்.

இருப்பினும் அல்வா மாதிரி கையில் கன்டென்ட் இருந்தும் சரியாக பயன்படுத்தவில்லை. அதாவது பட ரிவ்யூவராக வரும் அவர் தன் வழக்கமான பாணியில் எந்த படத்தையும் கலாய்க்கவில்லை.

அதேபோல் இப்போது யூடியூபில் நடக்கும் அலப்பறை பற்றியும் கலாய்ப்பார் என்று பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான். ஆனால் அதைத் தாண்டி படத்தில் ஹாரர் காமெடி அனைத்தும் இருக்கிறது.

சில இடங்களில் இது பிசிறு தட்டினாலும் ரசிக்கவும் வைத்திருக்கிறது. ஆனால் சில காமெடி கொஞ்சம் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

இசை பெரிய அளவில் மனதில் நிற்கவில்லை. ஆனால் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. முதல் பாதி கொஞ்சம் சிரிப்புடன் நகர்கிறது.

ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. இருந்தாலும் ஒருமுறை படத்தை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5