Tourist Family Movie Review: புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி இன்று வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரெய்லர், ஸ்னீக் பீக் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை படம் நல்லா இருக்கும் போலையே என சொல்ல வைத்தது. அதற்கேற்றார் போல் பிரஸ் ஷோ நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இப்படி ரிலீசுக்கு முன்பே கவனம் பெற்ற இப்படம் எப்படி இருக்கிறது? குடும்ப ஆடியன்ஸை கொண்டாட வைத்ததா? என்பதை ஒரு விமர்சனத்தின் வழியாக காண்போம்.
இலங்கைத் தமிழராக இருக்கும் சசிகுமார் குடும்பம் வறுமையில் வாடுகிறது. அந்த நாட்டிலிருந்து ராமேஸ்வரம் வழியாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வர அவர் திட்டம் போடுகிறார்.
அதன்படி இந்தியாவுக்கு வரும் அந்த குடும்பம் சென்னைக்கு வந்து ஒரு அப்பார்ட்மெண்டில் சாதாரண வாழ்க்கையை வாழ்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் திடீரென ஒரு பிரச்சனை வருகிறது
அதில் மாட்டிக்கொள்ளும் அந்த குடும்பம் தப்பித்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இயக்குனர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடியாக கொண்டு சென்றுள்ளார்.
முழு விமர்சனம்
பொதுவாக அடைக்கலம் தேடி வரும் இலங்கை தமிழர்கள் கதை என்றால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும். சோகமும் உணர்ச்சியும் கலந்ததாக இருக்கும்.
ஆனால் ஏன் அப்படி சொல்ல வேண்டும் ஜாலியாக சொல்லலாமே என இயக்குனர் யோசித்த விதமே பாராட்ட வைத்திருக்கிறது. அதே போல் திரைக்கதையும் ஃபீல் குட் என ஆடியன்ஸை சொல்ல வைத்துள்ளது.
அதேபோல் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்கள் வேலையை சிறப்பாக செய்துள்ளனர். அதில் சசிகுமாரின் இலங்கை தமிழ் அவருடைய வழக்கமான நடிப்பு எல்லாமே பாராட்ட வைக்கிறது.
மேலும் ரொம்ப நாளைக்கு பிறகு சிம்ரனை படம் முழுவதும் துள்ளலான நடிப்பில் பார்க்க முடிகிறது. அதேபோல் சிறுவன் கமலேஷின் நடிப்பு வேற லெவலில் உள்ளது.
அதற்கு ஏற்றார் போல் பின்னணி இசை படத்திற்கு பலமாக இருக்கிறது. இப்படி நிறைய பிளஸ் பாயிண்டுகள் படத்தில் இருக்கிறது. ஆனால் சில மைனஸ் விஷயங்களும் உள்ளது.
சில காட்சிகள் சீரியஸாக இருந்திருக்கலாமோ என தோன்ற வைக்கிறது. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த கோடை கால விடுமுறையை கொண்டாடுவதற்கு டூரிஸ்ட் ஃபேமிலி ஏற்ற தரமான படமாக இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5