1. Home
  2. விமர்சனங்கள்

கேப்டனை ஞாபகப்படுத்தும் சண்முக பாண்டியன்.. படைத்தலைவன் எப்படி இருக்கு.? விமர்சனம்

கேப்டனை ஞாபகப்படுத்தும் சண்முக பாண்டியன்.. படைத்தலைவன் எப்படி இருக்கு.? விமர்சனம்

Padai Thalaivan Movie Review: சண்முக பாண்டியன் நடிப்பில் இன்று படைத்தலைவன் வெளியாகி இருக்கிறது. இந்த வருட தொடக்கத்திலேயே வெளியாகி இருக்க வேண்டிய படம் பல தடங்கல்களுக்கு நடுவில் ரிலீஸ் ஆகிவிட்டது.

அன்பு இயக்கி இருக்கும் இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? சண்முக பாண்டியன் ஹீரோவாக வெற்றியை பதிவு செய்தாரா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

கேப்டன் வாரிசு என்பதாலேயே இவர் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் இப்படத்தில் அவருடைய தோற்றம் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்துமே ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்திருந்தது.

படைத்தலைவன் எப்படி இருக்கு.?

அதன்படி சண்முக பாண்டியன் தன் அப்பா தங்கை மற்றும் யானையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில் அவரின் யானை காணாமல் போகிறது. அதைத் தேடி அவர் புறப்படுகிறார்.

அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? யானையை அவர் மீட்டாரா? என்பதுதான் படத்தின் கதைகளம். கும்கி பட சாயலில் இருந்தாலும் கேப்டன் வாரிசு அசத்தி இருக்கிறார்.

சண்டை காட்சிகளில் அப்பாவை போலவே அதிரடி காட்டியுள்ளார். அவருடைய முந்தைய படங்களை காட்டிலும் இதில் ஹீரோவாக கவனம் பெறுகிறார்.

அதேபோல் ஒரு காட்சியில் ஏஐ மூலம் கேப்டன் வந்து அவருக்கு உதவுகிறார். அந்த காட்சியும் ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டலை வாங்குகிறது. இருப்பினும் மற்ற கதாபாத்திரங்களின் வேலை குறைவாக தான் இருக்கிறது.

இளையராஜாவின் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்துமே நன்றாக இருக்கிறது. இருந்தாலும் காட்சிகளில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கேப்டன் வாரிசின் இந்த அவதாரத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.