1. Home
  2. விமர்சனங்கள்

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

போலீஸ் கதாபாத்திரங்களை அதிக அளவில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடிகர் விஜயகுமார் மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
sinam-arunvijay

எமோஷனல் மற்றும் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக சீறி பாய்ந்துள்ளார். அவருடன் இணைந்து பாலக் லால்வானி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
sinam-movie-review

தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதில் படத்தின் இசை மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் ஆகியவை மிரட்டலாக இருப்பதாகவும், எமோஷனல் காட்சிகள் நன்றாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
sinam-arunvijay

அதிலும் அருண் விஜய் ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் அசத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற கிரைம் மற்றும் துப்பறியும் கேரக்டர்களில் அருண் விஜய் நன்றாக பொருந்தி விடுவார். அதே போன்று இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
sinam-movie-review

அந்த வகையில் முழு படத்தையும் அவர் தாங்கிப் பிடித்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முதல் பாதி முழுவதும் பேமிலி சென்டிமென்ட் காட்சிகளால் மெதுவாக நகரும் படம் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும், ஆர்வத்துடன் நகர்வதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சீறிப்பாயும் அருண் விஜய்யின் சினம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
sinam-arunvijay

இதனால் இப்படத்திற்கு தற்போது நல்ல ரேட்டிங் கிடைத்து வருகிறது. கடைசியாக அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அவர் நடித்த தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸும் பாராட்டுகளை பெற்றது. அந்த வரிசையில் தற்போது சினம் திரைப்படமும் இணைந்துள்ளது

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.