Maaman X Review : பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் மாமன் படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார்.

உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மாமன் படத்தின் கதையை சூரி எழுதி உள்ளார். தாய் மாமன் உறவு எத்தகையது, கணவன் மனைவி அன்னோன்யம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லும் படமாக மாமன் எடுக்கப்பட்டிருக்கிறது.

படம் முழுக்க தாய்மாமன் தனது அன்பான மருமகன் மீது கொண்ட பாசத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது. படத்தின் பாடல்கள் உணர்ச்சி பூர்வமான அம்சத்தை கொண்டுள்ளது.

சூரிக்கு ஒரு சரியான அறிமுகம் மற்றும் ஒரு நல்ல குடும்ப படம். சூரி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதி எண்டர்டேமென்ட் ஆக இருந்த நிலையில் இரண்டாம் பாதியில் எமோஷனல் ஆக அமைந்துள்ளது.

சுவாசிக்கா, ஐஸ்வர்யா, ராஜ்கிரன், குட்டி பிரசாந்த் அற்புதமாக நடித்துள்ளனர். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். சூரி கண்டிப்பாக இந்த படத்தில் மூலம் ஒரு உணர்ச்சிகரமான என்டர்டைன்மென்ட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.