கடைசி Squid Game-3 எப்படி இருக்கு.. முழு விமர்சனம்

Squid Game – 3 : Squid game-3 தற்போது netflix -ல் வெளியாகி தரமான பல செய்கைகளை செய்து கொண்டிருக்கிறது. Squid Game வெப் சீரிஸ் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. இது முற்றிலும் கேம் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. சீசன் -1 முதலில் 2021-ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸ்ஸை ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கியிருக்கிறார்.

அதற்கு அடுத்ததாக சீசன் 2 எப்போது வரும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் சீசன் -2 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் netflix வெளியாகி எதிர்பார்த்த வகையில் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த Squid Game-3 தற்போது ஓ டி டி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது சீசன் 2வை பார்த்து ஏமாந்து போன ரசிகர்களுக்கு சீசன் 3 கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

கடைசி Squid Game – 3..

சீசன் 3 இல் ஆறு எபிசோடுகளை உள்ளடக்கியது என்பதால் ரிலீசான முதல் நாளில் இருந்து இதை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் கடைசி சீசன் என்பதால் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிரபலமாக பேசப்பட்டது. சீசன் 2 முடிந்த இடத்தில் இருந்து சீசன் 3 ஆரம்பம் ஆகிறது. இதில் மொத்தம் மூன்று கேம் மட்டும் தான் உள்ளது. ஃபர்ஸ்ட் கேம் Hide & seek இதுல யார் யாரை முதலில் கொல்ல போறாங்க அப்படிங்கற ஒரு சஸ்பென்ஸ் இருந்துகிட்டே இருக்கு.

ஒரு சில காட்சிகள் தவிர மத்த காட்சிகள் அனைத்துமே விறுவிறுப்பாக உள்ளன. ஒரு குழந்தை இந்த கேமுக்குள்ள வந்த பிறகு கேம் முன்பிருந்ததை விட நன்றாகவே சூடு பிடிக்கிறது. குழந்தையை காப்பாற்ற நினைக்கும் ஹீரோ, ஆனால் தன் அப்பா தான் குழந்தையை கொல்லப் போகிறார் என்பது பிறகு தெரியவரும்.மொத்தம் 60 போட்டியாளர்களுடன் இந்த கேம் ஆரம்பமாகிறது இறுதியில் யார் வெற்றி பெற்றார் என்பதே கதை. மூன்று கேமுமே மிகப் பிரமாதமாக தயாரித்துள்ளனர்.

திடீரென்று எதிர்பார்க்காத போட்டியாளர்கள் உள்ளே களமிறங்குவார்கள். அந்த போட்டியாளர்கள் வந்ததற்கு பிறகு கேம் விறுவிறுவன நகர்ந்து செல்கிறது. இவர்கள் எலிமினேட் ஆவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்கள் திடீரென்று எழுமினேட் ஆவார்கள். சஸ்பென்ஸ்க்கு மேல சஸ்பென்ஸ் இருக்கும் இந்த சீசனில். ஹீரோவிற்கு ரோல்ஸ் கம்மிதான் என்றாலும் நன்றாக உள்ளது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தையும் ரசிக்கும் விதமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

கடைசியா எமோஷனல், துரோகம், திரில்லிங் என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் சீசன்3 அருமையாக உள்ளது. கிளைமாக்ஸ்ல் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கிளைமாக்ஸ். Squid Game- ல் சீசன் 1, சீசன் 2 பார்த்து எதிர்பார்த்த வகையில் இல்லை என புலம்பியவர்களுக்கு, சீசன் 3-ல் சஸ்பென்ஸ் காத்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக அனைவரும் பார்க்கும் வகையில் Squid Game -3 கேம்ஸ் உள்ளது அனைவரும் கண்டு மகிழுங்கள்.