மிரள விட்ட டொவினோ தாமஸ்.. நரிவேட்டை எப்படி இருக்கு

Narivetta Review : அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ், சேரன், சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகி இருக்கும் நரிவேட்டை படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் சேரனுக்கு இது அறிமுகப்படம். எப்போதும் இன்வெஸ்டிகேஷன் கதையில் மிரட்டும் டொவினோ தாமஸ் இந்த படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதாவது புதிதாக பணியில் சேரும் கான்ஸ்டபிள் தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக இருக்கிறார்.

அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடி சமூகத்தின் மக்களுக்காக போராடுகிறார் கான்ஸ்டபிள். கடைசியில் அவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்தாரா என்பது தான் நரிவேட்டை. இதில் உயர் அதிகாரியாக சேரன் மாஸ் காட்டி இருக்கிறார்.

டொவினோ தாமஸ் நரிவேட்டா விமர்சனம்

படத்திற்கு மற்றொரு பலமாக சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார். சிறிது நேரமே அவரது கதாபாத்திரம் வந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜேக்ஸ் பிஜோய் சிறப்பாக இசையமைத்திருக்கிறார். மலையாளத்தில் அத்தி பூத்தார் போல் இப்படி ஒரு கதை தேர்வு செய்து அதை திறம்பட இயக்கி உள்ளனர்.

படத்தின் காதல் காட்சிகள், பாடல்கள் போன்றவை அதிகமாக இருப்பதாக உணரப்படுகிறது. அவை சற்று குறைத்திருக்கலாம். மேலும் படத்தின் கதை இடைவேளைக்கு பிறகு தான் சூடு பிடிக்க தொடங்குகிறது.

இரண்டாம் பாதியில் மிகவும் அட்டமாசமாகவும், மனதை உலுக்கும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கிறது. தியேட்டரில் இருந்து வருபவர்களுக்கு கிளைமாக்ஸ் காட்சி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி வயநாடு சென்றால் நரி வேட்டை தான் நினைவிற்கு வரும்.