கிங்டம் திரைப்படம் எப்படி? முழு விமர்சனம்.. பலம், பலவீனம்

Kingdom Review : பொதுவாக காதல், காமெடி போன்ற படங்களில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா வித்தியாசமான கதைகளை கையில் எடுத்து இருக்கிறார். அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் கிங்டம் படம் இன்று தியேட்டரில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

கௌதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்யதேவ் அவரது அண்ணனாக சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சிறு வயதிலேயே தனது தந்தையை கொன்றுவிட்டு சிவா வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். அவரை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறார் சூரி. அந்தச் சமயத்தில் இலங்கையில் இயற்கை வளங்களை அபகரிக்க பயங்கரவாத கும்பல் ஊடுருவி உள்ளது.

அதை கண்டறியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் ஏஜெண்டாக சூரி செல்கிறார். அங்குள்ள சிறைக்குள் சென்று தனது அண்ணன் சிவாவின் கும்பலில் சேர்கிறார். அப்போது தங்க கடத்தல் நடைபெறும்போது போலீசுக்கு யாரோ ஒருவர் துப்பு கொடுப்பது தெரிய வருகிறது.

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் விமர்சனம்

யார் அவ்வாறு செய்கிறார்கள் என்று கண்டுபிடித்தார்களா, தனது தம்பி சூரிக்காக சிவா செய்த தியாகம் ஆகியவை கிங்டம் படத்தின் கிளைமாக்ஸாக அமைந்துள்ளது. படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது விஜய்தேவர கொண்டாவின் நடிப்பு. வித்யாசமான கதையை கையில் எடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

அனிருத்தின் பின்னணி இசை பக்க பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இன்டர்வல் காட்சியில் இடம்பெறும் பிஜிஎம் பக்கா மாஸ். கங்காதரன் மற்றும் ஜோமோன் ஆகியோரின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறது. கே ஜி எஃப் மற்றும் பாகுபலி போன்ற ஒரு உணர்வை கொடுக்கிறது.

படத்தின் காட்சிகள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், இலங்கை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள காட்சிகள் படத்தை மேம்படுத்தி உள்ளது. படத்தில் மைனஸ் என்றால் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இயக்குனர் கதையை எப்படி எடுத்துச் செல்வது என்பதில் சற்று குழம்பி இருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சிகளும் எதிர்பாத்த அளவுக்கு அமையவில்லை. ஆனால் புது விதமான ஒரு ஆக்சன் அனுபவத்தை விஜய் தேவரகொண்டா கொடுத்திருக்கிறார். ஆகையால் கண்டிப்பாக ஒருமுறையாவது தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5