சூது கவ்வும் விஜய் சேதுபதியின் Ace.. முழு விமர்சனம் இதோ!

Ace Review : ஆறுமுகக் குமார் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஏஸ் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

விஜய் சேதுபதி தன்னுடைய பழைய அடையாளங்களை மறைத்து மலேசியாவுக்கு செல்கிறார். அங்கு யோகி பாபுவின் நட்பு கிடைக்க அவருடன் தங்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஹோட்டலில் வேலையும் கிடைக்கிறது. இந்த சூழலில் தன்னுடைய எதிர் வீட்டில் இருக்கும் ருக்மணியை விஜய் சேதுபதி காதலிக்கிறார்.

ஆரம்பத்தில் சண்டையில் ஆரம்பிக்கும் இவர்கள் சந்திப்பு அதன் பிறகு காதலில் மலர்கிறது. தன்னுடைய காதலியின் பண தேவைக்காக சூதாட்டத்தில் இறங்குகிறார். ஆனால் இதன் மூலம் பெரிய கடனாளியாக மாறுகிறார்.

விஜய் சேதுபதியின் Ace படத்தின் விமர்சனம்

மற்றொருபுறம் யோகி பாபுவும் அவரது தோழி திவ்யா ஆகியோரும் கடனில் இருக்கின்றனர். இந்த எல்லா பிரச்சனையும் தீர்ப்பதற்காக விஜய் சேதுபதி வங்கியில் இருந்து பணத்தை கொள்ளை அடித்து விடுகிறார்.

இவரிடம் பணம் இருக்கும் விஷயம் வில்லன்களுக்கு தெரிவதால் அவர்கள் பணத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். மற்றொருபுறம் போலீஸ் வங்கி கொள்ளைக்கு காரணம் யார் என்று துப்பு துளவுகிறார்கள்.

வில்லன்களிடம் விஜய் சேதுபதி சிக்கினாரா, போலீஸ் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா, திருடிய பண்ணதை விஜய் சேதுபதி என்ன செய்தார் என்ற நகைச்சுவையான கதை களத்தை ஏஸ் படம் கொண்டிருந்தது.

விஜய் சேதுபதியின் நடிப்பு, பின்னணி இசை போன்றவை படத்திற்கு பக்கபலமாக அமைந்தது. யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி இடையேயான காமெடி காட்சிகள் ரசிக்கும்படி அமைந்தது. கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் பக்கா மாசாக இருந்திருக்கும்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/5