மிரட்டி விட்ட விக்ரம்.. கோப்ரா எப்படி இருக்கு? அனல் பறக்கும் டிவிட்டர் விமர்சனம்

விக்ரம் நடிப்பில் பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று கோப்ரா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக விக்ரமும், அவருடைய ரசிகர்களும் இந்த படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருந்தனர். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

cobra-movie-review-1
cobra-movie-review-1cobra-movie-review-1

அந்த வகையில் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றிய கருத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தை காண தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குவிந்து வருகிறது.

cobra-vikram
cobra-vikram

அந்நியன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கும் விக்ரமை அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். பல அசத்தலான கெட்டப்புகளை போட்டு அசால்டாக நடித்திருக்கும் அவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

cobra-vikram
cobra-vikram

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜய் ஞானமுத்து இந்த படத்தின் மூலம் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். மேலும் அழுத்தமான திரைக்கதை படத்தை விறுவிறுப்பாக்குவதாகவும், முதல் பாதி பல டிவிஸ்ட்டுகளுடன் நகர்வதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அந்த சஸ்பென்ஸ் அனைத்தும் இரண்டாம் பாதியில் விளக்கப்படும் போது எதிர்பாராத திருப்பமாகவும் இருக்கின்றது. அதிலும் அந்த இடைவேளை காட்சியின் டிவிஸ்ட் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்று. அதே போன்று ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் தெறிக்க விடுகிறது.

cobra-vikram
cobra-vikram

ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தின் மூலம் அடுத்தடுத்த தமிழ் படங்களில் இடம் பிடிப்பார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சிலர் படத்தை பற்றி நெகட்டிவ் கருத்துக்களை தெரிவித்தாலும் மொத்தத்தில் படம் நன்றாக இருக்கிறது என்பதுதான் ஒட்டு மொத்த ரசிகர்களின் கருத்தாகும். ஆக மொத்தம் ரசிகர்களின் நீண்ட வருட காத்திருப்பதற்குப் பிறகு வெளியாகி இருக்கும் இந்த கோப்ரா வேற லெவலில் மாஸ் காட்டி வருகிறது.

cobra-vikram
cobra-vikram