Desingu Raja 2 Review: இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், குக் வித் கோமாளி புகழ், ரவி மரியா ஆகியோரது கலகலப்பான கூட்டணியில் தேசிங்கு ராஜா 2 படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. விமல், பிந்து மாதவி, சூரி நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது நமக்கு தெரியும்.
அந்த வரிசையில் தான் இதை இரண்டாம் பாகம் என களம் இறக்கி இருக்கிறார் இயக்குனர் எழில். குலசேகரன் என்ற கதாபாத்திரத்தில் விமல் காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார்.
தேசிங்கு ராஜா 2 விமர்சனம்
பக்கத்து கிராமத்தின் போலீஸ் ஸ்டேஷனில் அதே காவல்துறை ஆய்வாளர் பணியில் புகழ் வர்ணஜாலம் என்னும் பெண் கெட்டப்பில் வருகிறார். இவர்களுக்குள் யார் சிறந்த போலீஸ் என பெரிய போட்டியே நடக்கிறது.
இந்த சமயத்தில் தான் ரவி மரியா ரவுடிகளால் கொல்லப்படுகிறார். இதற்கு இன்னொரு ரவுடிதான் காரணம் என நினைத்து அவருடைய கூட்டம் அந்த ரவுடியின் மகனை கொல்ல நினைக்கிறது. அந்த ரவுடியின் மகன் தன்னை காப்பாற்றுமாறு போலீஸ் இடம் தஞ்சம் அடைகிறார்.
அடுத்த கதை நகர்வு தான் படத்தின் கதை. திரைக்கதையில் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தேசிங்கு ராஜா முதல் பாகத்தில் சிறப்பான கதையை கொடுத்திருந்த எழில் இதில் மொத்தமாய் கோட்டையை விட்டு விட்டார்.
பல காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் ஒரு இரண்டு நிமிடங்கள் கூட வாய்விட்டு சிரிக்க முடியாமல் போனது படத்தின் பெரிய மைனஸ். புகழ் படம் முழுக்க பெண் வேடத்தில் வருவதால் பெரிய அளவில் அவர் மீது கவனம் இருக்கவில்லை.
சமீப காலமாக வலைத்தொடர்கள் மூலம் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருந்தார் விமல். அதை இந்த படத்தில் நடித்து கெடுத்துக் கொண்டார் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.