War 2 Review : அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது வார் 2 படம். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான வார் படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் வெளியாகி இருக்கிறது.
படத்தின் தொடக்கத்திலேயே ஜப்பானிலிருந்து ஹ்ரித்திக் ரோஷனின் என்ட்ரி அமைகிறது. கபீர் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். கூலிப்படை வீரராக நியமிக்கப்படுகிறார் கபீர். மேலும் லிங் கமாண்டராக காவியா லுத்ரா என்ற கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.
இவரின் தந்தை காளியால் அமைக்கப்பட்ட ஒரு வலையில் சிக்குகிறார். இதனால் கபீரை கொலை செய்ய உத்தரவிடப்படுகிறது. மேலும் காளியை தடுப்பதற்கு அனில் கபூர் புதிய தலைவராக அறிவிக்கப்படுகிறார். அப்போது மிகவும் கடுமையான அதிகாரியாக விக்ரம் என்று கேரக்டரில் என்ட்ரி கொடுக்கிறார் ஜூனியர் என்டிஆர்.
வார் 2 பட முழு விமர்சனம்
இதனிடையே ஜப்பான், டெல்லி, ஆம்ஸ்ட்ராங் போன்ற இடங்களில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறுகிறது. விக்ரம் மற்றும் கபீர் இருவரும் காளியை அளிக்க ஒன்றாக பயணிக்கிறார்கள். கடைசியில் இதில் வெற்றி பெற்றார்களா என்பது தான் வார் 2 கதை.
படத்தில் பிரபலங்களின் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. ப்ரீதம் இசையமைப்பில் உருவான சலாம் அனாலி பாடல் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படத்திற்கு மைனஸ் என்னவென்றால் முதல் பாதி எங்கு செல்கிறது என்பதே தெரியவில்லை.
படம் ஆரம்பித்து 40 நிமிடங்களுக்குப் பிறகுதான் ஜூனியர் என்டிஆரின் என்ட்ரி உள்ளது. கியாரா அத்வானியின் நடிப்பு அற்புதமாக இருந்தாலும் கதைக்கு அவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைவாக இருக்கிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் புதுமையான விஷயங்கள் எதுவும் இல்லை.
400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இருந்தும் விஎப்எக்ஸ் சரியாக அமையவில்லை. கதையின் ஆழம் சரியாக இல்லாததால் பார்வையாளர்களை உணர்வு பூர்வமாக ஈர்க்க வார் 2 படம் தவறிவிட்டது.
சினிமாபேட்டை ரேட்டிங் :2.5/5