War 2 Twitter Review : ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாக வார் 2 படம் இன்று வெளியாகி இருக்கிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருக்கின்றனர். அதுவும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் அறிமுக பாலிவுட் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இப்போது வார் 2 படத்திற்கான டுவிட்டர் விமர்சனத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த படம் இரண்டு ஆல்ஃபா டைட்டன்களுக்கு இடையே ஆன இடிமுழக்க மோதல். பவர்ஃபுல் காட்சி, அதிரடியான ஆக்சன் என ஒரு என்டர்டைன்மென்ட் படமாக ஏற்படும் இருக்கிறது.

வார் 2 படத்தில் இசை மட்டும் நன்றாக உள்ளது. பலவீனமான கதை, மோசமான விஎஃப்எக்ஸ், யூகிக்கக்கூடிய திருப்பங்கள் உள்ளது. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பு திருப்திபடுத்த தவறியது. ஜூனியர் என்டிஆர் நன்றாக நடித்திருக்கிறார்.

வார் 2 படம் இன்டெர்வெலுக்குப் பிறகு சரியான பாதையில் செல்கிறது. ஆரம்பத்தில் படம் எங்கு செல்கிறது என்று சரியாக சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் அந்த திருப்பம் இரண்டாம் பாதியில் ஆர்வத்தை தூண்டியது.

படத்தில் அதிகமான இடங்களில் லாஜிக் மீறல் உள்ளது. சராசரிக்கும் குறைவான முதல் பாதி ரசிகர்களை ஏமாற்றம் அளித்துள்ளது. வார் 2 படம் மொத்தத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
