செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தமன்னா கிளாமராக ஆடியதால் ஏற்பட்ட கலவரம்.. கட்டுக்கடங்காத கூட்டத்தால் போர்க்களமாக மாறிய இசை நிகழ்ச்சி

Riot caused by Tamannaah performing as Glamour: பொதுவாக பிரபலங்கள் அவர்களுடைய திறமைகளை வைத்து அவ்வப்போது இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்தான். அதே மாதிரி சமீபத்தில் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் ரசிகர்கள் பலரும் கூட்டத்தில் சிக்கி அவதிப்பட்ட நிலையில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. இதே மாதிரி தற்போது ஸ்ரீலங்காவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு இருக்கிறது.

இலங்கையில் யாழ்ப்பாணம் அடுத்த முற்றவெளி மைதானத்தில் பாடகர் ஹரிஹரன் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ரம்பாவின் கணவர் இந்திரகுமார் ஏற்பாடு பண்ணி இருக்கிறார். இதில் நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, பாலா மற்றும் நடன இயக்குனர்கள் கலா, சாண்டி ஆகியோர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக 50000 பேர் வந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ரசிகர்கள் தமன்னா ரொம்பவே கவர்ச்சியாக கிளாமர் தூக்கலுடன் ஆடியதும் மக்கள் கடலென திரண்டு அலைமோத ஆரம்பித்து விட்டார்கள். முக்கியமாக காவலா பாட்டுக்கு ஆடிய பொழுது அதை பார்ப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு முன்வந்து பார்ப்பதற்கு ரசிகர்கள் முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

Also read: சொந்தத் தொழிலில் கல்லா கட்டும் மில்க் பியூட்டி.. அடேங்கப்பா! தமன்னா தொடங்கி இருக்கும் பிசினஸ் இதுதானா?

இதனால் பார்க்க வந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் அடிபட்டதுடன் கட்டுக்கடங்காத கூட்டத்தால் போர்க்களமாக அந்த இசை நிகழ்ச்சி மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் சரியான செக்குரிட்டி அமைக்கப்படாததாலும், மக்களுக்கு ஏற்ற மாதிரி இடத்தை சரியாக கொண்டு போகாமல் விட்டதால்தான்.

ஆரம்பத்தில் பார்ப்பதற்கு அனுமதி இலவசம் என்று சொல்லிய நிலையில் தமன்னா டான்ஸ் இருக்கிறது என்று சொன்னதும் மக்களிடம் பணத்தை வாங்கி விட்டார்கள். ஆனால் அதற்கு ஏற்ற மாதிரி எந்தவித ஏற்படும் சரியாக செய்யாமல் போனதால் அங்கே தடியடி நடக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் தமன்னாவின் கிளாமர் டான்சும் அவர் போட்டிருந்த மோசமான உடையும்தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.  இதனால் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியாமல் பாதிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் இதில் 3பேர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 6 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

கட்டுக்கடங்காத கூட்டத்தால் போர்க்களமாக மாறிய இசை நிகழ்ச்சி

music programme
music programme

Also read: த்ரிஷாவை தொடர்ந்து ரஜினி ஹீரோயினையும் கொச்சைப்படுத்திய மன்சூர்.. கொந்தளிப்புடன் பேசிய வில்லன்

Trending News