படம் பார்க்க நாங்களா கூப்பிட்டோம்? … உயரும் டிக்கெட் கட்டணம்! அரசிடம் வைத்த கோரிக்கை!


தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தியேட்டர்கள் உள்ளன. அந்தக் காலம் முதல் சில தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. சில தியேட்டர்களை மெயின்டெய்ன் செய்யமுடியாமல் அவற்றை விற்றுவிடுகின்றன. இல்லையென்றால் மால், வணிக வளாகங்களாக மாற்றிவிடுகின்றனர்.

இன்றைய மாடர்ன் உலகில் மல்டிபிளக்ஸ் ஸ்கிரீன்கள் அதிகளவும் இருக்கும் நிலையில், இவையும் அக்காலத்தைப் போன்று தியேட்டர்களில் ஏசி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் அவற்றிற்கு ரசிகர்கள் செல்வதும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் திரைப்படங்களைப் பொறுத்து மூலம் ரசிகர்களின் வருகை அமைகிறது.

தற்போது முன்னணி நடிகர்களின் படங்களே கூட சில நாட்களுக்குத்தான் தியேட்டரில் ஓடுகின்றன. அதுவும் வாரம் தோறும் படங்கள் ரிலீஸாவதால் போட்டியாலும், லாபம் நோக்குடனும் கிடைத்தது போதும் என்ற கணக்கில் அடுத்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தியேட்டர்களில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதிக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் உயர்த்தித் தர அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

அதில், ”கூடுதலாக 10 சதவீதம் பராமரிப்புக் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதியும், மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு ரூ.250 வரையிலும், ஏசி தியேட்டருக்கு ரூ.200 வரையிலும் உயர்த்த அனுமதிக்க வேண்டும், ஏசி இல்லாத தியேட்டர்களுக்கு ரூ.150 வரைலும் டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ”பக்கத்து மாநிலங்களில் 24 மணி நேரமும் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ் நாட்டிலும் 24 மணி நேரமும் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டுமென கோரிக்கையும், எளிய முறையில் ஆபரேட்டர் லைசென்ச் தரும்படியும், மால் திரையரங்குகளில் கமர்சியல் செயல்களுக்கு அனுமதி அளித்ததுபோல், மற்ற திரையரங்குகளுக்கும் கமர்சியல் செயல்களுக்கு அனுமதி தரும்படியும் , மின் கட்டணங்களை MSME விதிகளின் கீழ் வசூலிக்கப்பட வேண்டுமென” கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கைகளை அரசு ஏற்று நிறைவேற்றினால்தான் தங்களால் தியேட்டர்களை நஷ்டமின்றி நடத்தமுடியும், தற்போது தியேட்டர் உரிமையாளர்கள் கஷ்டமாக சூழலில் இருப்பதாகவும் என்று அக்கடித்தில் குறிப்பிட்டுள்ளனர். இக்கோரிக்கைகள் அரசு ஏற்றால் ஒருவேளை தியேட்டரில் கட்டணங்கள் உயரும் என தெரிகிறது.

Trending News

- Advertisement -spot_img