வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மேடையில் மன்னிப்பு கேட்ட ரித்திகா சிங்.. இன் கார் பட ப்ரோமோஷனில் கண்கலங்கியதால் பரபரப்பு

சவால் நிறைந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரித்திகா சிங், தற்போது இன் கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலருக்கும் பயம் காட்டியது.

இயக்குனர் ஹரிஷ் வர்தன் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வரும் மார்ச் 3ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரித்திகா சிங் பொது மேடையில் மன்னிப்பு கேட்டது மட்டுமல்லாமல் கண் கலங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read: காருக்குள் சித்ரவதை அனுபவிக்கும் ரித்திகா சிங்.. பதற வைக்கும் இன்கார் ட்ரைலர்

இன் கார் படத்தில், கடத்தப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்ணின் வலியை எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக காண்பித்திருக்கின்றனர். இதில் நடிப்பது ரித்திகாவிற்கு பெரும் சவாலாக இருந்ததாம். ஒரு கடத்தலுக்கு உள்ளாகும் பெண் எத்தனை மனச் சிதைவுக்கு உள்ளாகிறார். அவர் துன்பத்தின் எந்த எல்லை வரை செல்கிறார் என்பதை நுணுக்கமாக இந்த படம் சொல்லும். இந்த படத்தில் நடித்த பிறகு அவரால் அந்த கதாபாத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை.

மேலும் இன்கார் படம் அவரை பெரிதும் பாதித்ததாகவும் கலக்கத்துடன் பேசினார். அது மட்டுமல்ல இந்தப் படத்தை இயக்குனர் ஹரிஷ் வர்தன் உறவினர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தின் பாதிப்பால் தான் உருவாக்கப்பட்டது. பெண்களின் மீதான வன்முறை ஒவ்வொரு நாளும் இந்தியா முழுக்க நடந்து கொண்டிருக்கிறது.

Also Read: காருக்குள் கண்ட மேனி கவர்ச்சி காட்டிய ரித்திகா சிங்.. இதுல நித்தியானந்தா மாதிரி ஒரு சிரிப்பு வேற!

ஆறு மாத பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைப்பதில்லை. இதை செய்பவர்கள் மிக இயல்பான வாழ்க்கை வாழும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது எது அவர்களை இது போன்ற கேவலமான வேலைகளை செய்ய வைக்கிறது. அதிலும் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண் எத்தனை சித்திரவதைக்கு ஆளாகிறார்.

அந்த நொடி எத்தனை மன ரீதியான பிரச்சனைகளை தரும். இதையெல்லாம் சொல்ல நினைத்து உருவானதே இன் கார் படம் என்று பட புரமோஷன் நிகழ்ச்சியில் கண் கலங்கி பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ரித்திகா சிங் கொஞ்சம் கால தாமதமானதால் அவருக்காக காத்திருந்த செய்தியாளர்களிடமும் ரசிகர்களிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.

Also Read: ரித்திகா சிங் உடன்பிறந்த சகோதரியை பார்த்துள்ளீர்களா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

ஏற்கனவே ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயினாக மாறினார். மறுபடியும் இன் கார் படத்தின் மூலம், இப்படி ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தை கையில் எடுத்து நடித்திருப்பதை குறித்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவிக்கின்றனர்.

Trending News