திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஓவர் தலைகனத்துடன் சுற்றி வந்த ஆர்ஜே பாலாஜி.. குப்பை கதையால் தயாரிப்பாளரிடம் காலில் விழுந்த பரிதாபம்

RJ Balaji: ஒருவருக்கு கொஞ்சம் வாய் தொடுப்பாக இருந்தாலே அவர்கள் ஈசியாக அனைவரிடமும் பிரபலம் ஆகி விடுவார்கள். அப்படித்தான் ஆர்ஜே பாலாஜி அவருடைய பேச்சாளையே அனைவரையும் கவர்ந்து மக்கள் அறியும் ஹீரோவாக சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அப்படிப்பட்ட இவர் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவாகவும் இவருடைய திறமைகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறார்.

அதனாலேயே இவருடைய பேச்சும் கொஞ்சம் ஓவராகி போய்விட்டது. ஆரம்பத்தில் கேட்க நன்றாக தான் இருந்தது. ஆனால் அதையே ட்ரிக்ஸ் ஆக பாலோ பண்ணி போகும் இடமெல்லாம் ஓவர் தலைகனத்துடன் பேசிக்கொண்டு மற்றவர்களை கலாய்ப்பது, கிண்டல் செய்வது என்று முழு நேர வேலையாகவும் ஆக்கிக் கொண்டார்.

Also read: 63 வயது நடிகருக்கு 4-வது மனைவியான ஆர்ஜே பாலாஜியின் மாமியார்.. நீதிபதி வச்ச ஆப்பு!

அப்படிப்பட்ட இவர் தற்போது ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறார். அதாவது ஐசரி கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் கோகுல் இயக்கிய சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படம் எடுக்கும் பொழுதே ஆர்ஜே பாலாஜிக்கும், இயக்குனருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

அப்பொழுது இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்தது ஐசரி கணேஷ் தான். அதன் பின் ஒரு வழியாக முதல் பாகத்தை எடுத்து முடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தை பார்க்கும் பொழுது ரொம்பவே மோசமாக ஒரு குப்பை கதை மாதிரி இருக்கிறதாம். அதனால் இதை ரிலீஸ் செய்தால் பார்க்க நன்றாக இருக்காது என்று ஆர்ஜே பாலாஜி தலையில் அடித்து புலம்பி இருக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட இயக்குனர்.. கால்ஷீட் கொடுத்து லாக் செய்த ஆர்ஜே பாலாஜி

அத்துடன் இப்படம் வெளிவந்தால் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகிவிடும் என்பதற்காக தயாரிப்பாளரிடம் தயவு செய்து இந்த படத்தை இப்படியே நிறுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த படத்திற்கு என்ன செலவு ஆனதோ அதை ஈடு கட்டும் விதமாக நான் அடுத்த படத்தில் உங்களுக்கு நடித்துக் கொடுக்கிறேன். அதனால் தயவு செய்து இந்த படத்தை இப்படியே விட்டு விடுங்கள் என்று தயாரிப்பாளர் காலில் விழுந்து கெஞ்சி வருகிறார்.

ஆனால் உண்மையிலேயே இந்த படம் குப்பை படம் மாதிரி தான் இருக்கிறதா? அல்லது இயக்குனருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் நடிப்பதற்கு பின்வாங்குகிறாரா என்பது தான் தயாரிப்பாளருக்கு ஒரு சந்தேகமாகவே இருக்கிறது. அதனால் இந்த படத்தை தொடர்ந்து எடுக்கவும் முடியாமல், பாதியிலே விடவும் முடியாமல் தயாரிப்பாளர் குழப்பத்துடன் இருக்கிறார்.

Also read: ஆர்ஜே பாலாஜிக்கு இப்படி ஒரு மனைவியா?. 20 வருடத்திற்கு முன் அந்த ஹீரோ மூஞ்ச பார்க்க சகிக்கல

Trending News