Suriya: சூர்யாவின் 45வது பட இயக்குனர் ஆர் ஜே பாலாஜி என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. படத்தின் பூஜை போடப்பட்டு நடிகர்களின் தகவல்களும் வெளியாகிவிட்டது.
இனி அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்ய பட குழு தயாராகி விட்டார்களாம். அதன்படி இப்படத்தின் சூட்டிங் கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.
அங்கு சூர்யா படப்பிடிப்பில் அதிக கவனத்துடன் இருக்கிறாராம். எப்படி என்றால் தினமும் சீன் பேப்பரை வாங்கி இன்ச் பை இன்ச் ஆக உன்னிப்பாக கவனிக்கிறாராம்.
ஏனென்றால் ஆர்ஜே பாலாஜியின் முந்தைய படங்களில் சில அரசியல் நையாண்டி உட்பட பல வசனங்கள் இருந்திருக்கிறது. அதுபோல் எந்த வசனமும் இருந்துவிடக் கூடாது என்ற கவனம் தான்.
கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கும் சூர்யா
இதற்கு முக்கிய காரணம் தற்போது கங்குவா படத்தால் சூர்யா மன உளைச்சலுக்கு ஆளானார். வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவர் அடுத்தடுத்த படங்களில் அதிக கவனத்துடன் இருப்பதற்கான காரணமும் இதுதான்.
மேலும் தற்போதைய காலகட்டத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை. அதனாலயே அரசியல் கிண்டல் வசனங்களை அவர் தவிர்க்க நினைத்துள்ளார்.
மேலும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என பல பிரபலங்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதேபோல் அவருடைய செயல்பாடுகள் அரசியல் வருகைக்கானது என்ற செய்தியும் பரவி வருகிறது.
அதனால் தான் அவர் சூர்யா 45 படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சில அரசியல் சமாச்சாரங்கள் இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.