சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

ஆர்ஜே பாலாஜிக்கு இப்படி ஒரு மனைவியா?. 20 வருடத்திற்கு முன் அந்த ஹீரோ மூஞ்ச பார்க்க சகிக்கல

ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக தனது திரைப்பயணத்தை தொடங்கி இருந்தார். இவரது குரல் பெரும்பாலானோருக்கு பரிச்சயமாக இருந்தது. இதைத்தொடர்ந்து கிரிக்கெட் காமென்டராகவும் ஆர் ஜே பாலாஜி பணிபுரிந்துள்ளார். மிகவும் கலகலப்பாக பேசக்கூடிய இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த எல்கேஜி படம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தனது படத்தில் நடிக்க வைக்க சம்மதித்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் அவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

Also Read : நாங்க நெனச்சதை விட செம, பார்ட்டி கொண்டாடிய RJ பாலாஜி.. விலை போகாததற்கு இவ்வளவு பில்டப்பா

மேலும் தளபதி விஜய்க்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளதாக ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் போட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது தனது காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறியிருக்கிறார்.

அடுத்ததாக 20 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், தற்போது உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். ஆர் ஜே பாலாஜி கல்லூரி படிக்கும் போதே திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மேலும் தன்னுடைய 21 வது வயதில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : 4 படங்கள் ரிலீசாகியும் பிரயோஜனம் இல்லை.. வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஆர் ஜே பாலாஜி வாங்கிய மொக்கை

அதன்பின்பு இவர்கள் இரு குடும்பத்தின் பெற்றோரும் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த சூழலில் தனது மனைவியின் பிறந்த நாளில் ஆர் ஜே பாலாஜி போட்டுள்ள பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது 2003 முதல் 2023 வரை நம்முடைய காதல் பயணம் தொடர்ந்து வருகிறது.

மேலும் நாம் வெகு தூரம் வந்து விட்டோம் என்று பெருமையாக இருக்கிறது. ஆனாலும் அப்போது இருந்தது போல டீனேஜர்களாக தான் தற்போதும் இருக்கிறோம். அதுமட்டுமின்றி என்னை விட்டுக் கொடுக்காமல் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி. ஐ லவ் யூ அச்சு என ஆர்ஜே பாலாஜி பதிவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இவருக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

20 வருடங்களுக்கு முன்பு ஆர்ஜே பாலாஜி

rj-balaji

ஆர் ஜே பாலாஜிக்கு இப்படி ஒரு அழகான மனைவியா

rj-balaji-wife

Also Read : விஜயின் ஆசையை நிறைவேற்றாத ஆர்.ஜே. பாலாஜி.. மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய்

Trending News