வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மனுஷன்னா இவர் தான்யா.. பெரிய ஹீரோக்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆகும் ஆர்ஜே பாலாஜி

ஆர் ஜே பாலாஜி இப்பொழுது சினிமாவில் தன் திறமையால் வளர்ந்து ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் கஷ்டப்பட்டு இருந்தாலும் தமிழ் சினிமா இப்பொழுது அவருக்கென்று ஒரு நிலையான இடத்தை கொடுத்துள்ளது.

தற்போது இவர் நிறைய படங்களில் ஹீரோவாகவும், காமெடியிலும் கலக்கி தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்று அசத்திக் கொண்டிருக்கிறார். இப்போது இவர் வீட்ல விசேஷங்க என்ற திரைப்படத்தை இயக்கி, நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் திரையுலகில் ஒரு நல்ல நிலையில் இருப்பவர்கள் கஷ்டப்படுபவர்களுக்கு எந்த உதவியும் செய்வது கிடையாது. அப்படி இருக்கும் இந்த சினிமா துறையில் ஆர் ஜே பாலாஜி தன் அசிஸ்டன்ட்களுக்கு தன் கையில் இருக்கும் காசை தினமும் சம்பளமாக கொடுத்து வருகிறாராம்.

எப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகிறதாம். ஆனால் அவர் அதை தயாரிப்பாளர்களிடம் வாங்காமல் தன் சொந்த காசில் கொடுத்து அசத்தி வருகிறார். இப்போது முன்னணியில் இருக்கும் பல நடிகைகள் தங்களுக்கு மேக்கப் போன்றவற்றிற்கு தனித் தனியாக ஆட்களை நியமித்து கொள்கின்றனர்.

அவர்களுக்கான சம்பளம், தங்கும் செலவு என்று அனைத்தையும் தயாரிப்பாளர்கள்தான் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல ஹீரோக்களும் தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி தன்னுடைய காசு போல் கொடுத்து வரும் இந்தக் காலத்தில், ஆர்ஜே பாலாஜி தன் கையில் இருக்கும் காசை கொடுப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இது இப்போது இருக்கும் பல பெரிய ஹீரோக்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் போலிருக்கிறது. இதை பார்த்தாவது இப்போது இருக்கும் ஹீரோக்கள் பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை. இருப்பினும் ஆர்ஜே பாலாஜியின் இந்த குணம் திரையுலகில் ஒரு நல்ல மதிப்பைப் பெற்றுள்ளது.

Trending News