சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பல லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் வாங்கிய RJ பாலாஜி.. மனைவியுடன் வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் சினிமாவில் சேர்க்க வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டும்தான் அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்து சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு பெறுகின்றனர். அப்படி சினிமாவில் வெற்றிபெற்ற நடிகர்கள் ஏராளம் என்று தான் கூற வேண்டும்.

ஆர் ஜே பாலாஜி முதலில் ரேடியோ நிகழ்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு மாதம் 20 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. இதனை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். மேலும் ஆர்ஜேவாக வேலை செய்யும் போது சமூக கருத்துக்களை கூற முடிந்தது. அதனால்தான் இந்த வேலை செய்ததாகவும் தெரிவித்தார்.

சுந்தர் சி ஆர் ஜே பாலாஜி தன்னுடைய படத்தில் நடிக்க முடியுமா என கேட்டுள்ளார். மேலும் படத்துக்கு சம்பளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை கூறியுள்ளார். இதனைக் கேட்ட ஆர் ஜே பாலாஜி நாம் வாங்கும் ஒரு வருட சம்பளத்தை ஒரு படத்தில் கொடுக்கிறார் என்ற நோக்கத்தில்தான் படத்தில் நடிக்க தொடங்கியது பல மேடைகளில் தெரிவித்தார்.

அதன் பிறகு சினிமாவில் அடுத்தடுத்து கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதை சரியாக பயன்படுத்தி தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

rj balaji
rj balaji

தற்போது ஆர்ஜே பாலாஜி 50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் கார் வாங்கியுள்ளார். மேலும் தனது மனைவியுடன் இந்த கார் வாங்கி உள்ள புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆர் ஜே பாலாஜி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Trending News