RJ Balaji: சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் ஆர்ஜே பாலாஜி கிரிக்கெட் விளையாட்டுகளில் நடக்கும் விஷயங்களை தமிழ் சேனலில் சொல்லும் வர்ணையாளராக செயல்பட்டு வந்தார். அதில் இவருடைய வேடிக்கையான பேச்சும் துல்லியமான தகவலும் மக்களுக்கு ரொம்பவே பிடித்த ஒரு நபராக மாறிவிட்டார். அதன்படி வானொலி நிகழ்ச்சியிலும் தொகுத்து வழங்கி மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார்.
இதை வைத்துக்கொண்டு சினிமாவிற்குள் காமெடியனாக நுழைந்து இவருக்கு என்று ஒரு முத்திரையை பதித்தார். அதன் பின் நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் பிரபலமாகி எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இதில் இவருக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் தொடர்ந்து ஹீரோவாக பயணிக்கும் பாதையை அமைத்துக் கொண்டார்.
ஆர்ஜே பாலாஜியின் புது படத்தின் அப்டேட்
இதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் மற்றும் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் போன்ற படங்கள் அனைத்திலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்து மக்களிடம் வரவேற்பை பெற்று விட்டார். ஹீரோவாக மட்டுமில்லை இயக்குனராகவும் பயணிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் மூக்குத்தி அம்மன் மற்றும் எல்கேஜி படங்களை இயக்கவும் செய்தார்.
இப்படி இவர் எடுத்து வைத்த பாதைகள் அனைத்தும் வெற்றிப் பாதைகளாக அமைந்து சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மேலும் இன்று 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில் மணிகண்டனை வைத்து குட் நைட் மற்றும் லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனத்துடன் கூட்டணி வைக்கப் போகிறார்.
இவர் தயாரித்த இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த நிறுவனம் தயாரித்த படத்தை பார்க்கும் பொழுது மனதுக்கு நிறைவான ஒரு உணர்வை கொடுக்கிறது என்று நினைப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக மில்லியன் டாலர் தயாரிப்பு நிறுவனம் வெற்றி படங்களை தயாரித்த பெருமையை எடுத்து விட்டது.
தற்போது இவர் ஆர்.ஜே பாலாஜியை வைத்து தயாரிக்கப் போகிறார். இன்னும் இப்படத்திற்கான டைட்டில் முடிவாகவில்லை. ஆனால் இவருடைய பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டரை வெளியிட வேண்டும் என்று நோக்கத்தில் கேக்கை வெட்டும் தோரணையுடன் மிரட்டலான போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதில் ஆர்ஜே பாலாஜி கையில் ரத்தம் படிந்த கத்தியும், கேக்குக்கு பக்கத்தில் துப்பாக்கி, சிறிய சுத்தியலும் மற்றும் மதுபான பாட்டில் போன்ற விஷயங்களை வைத்து நக்கலான சிரிப்புடன் ஆர்ஜே பாலாஜி அடுத்த படத்தின் போஸ்டர் வெளிவந்திருக்கிறது. இந்த போஸ்டரை பார்த்த பலரும் இது என்ன ஆர்ஜே பாலாஜி இப்படி ஒரு வித்தியாசமான பாணியில் இருக்கிறார்.
இதுவரை நக்கல் கலந்த காமெடி படத்தை கொடுத்து வந்த இவர் புதிதாக ஏதோ முயற்சி எடுக்கிறார் என்று பேச வைத்திருக்கிறது. அத்துடன் தற்போது வில்லன் கேரக்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதால் இதில் ஒரு நெகட்டிவ் கேரக்டராக இருப்பாரோ என்று யோசிக்கவும் வைத்திருக்கிறார். இதை எல்லாம் தாண்டி இப்படத்தின் டைட்டிலையும் அடுத்தடுத்த அப்டேட்டையும் வெளியிட்டு ஒரு சம்பவத்தை பண்ண போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
ஆர்ஜே பாலாஜி வெற்றியின் ரகசியம்
- தனக்குத்தானே ஆப்பு வைத்த RJ பாலாஜி, யோகி பாபு
- நாங்க நெனச்சதை விட செம, பார்ட்டி கொண்டாடிய RJ பாலாஜி
- கிளி ஜோசியம் பார்த்து படத்தை ஓட வைக்கும் RJ பாலாஜி