தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியில் படமெடுத்தாலும், கதை, திரைக்கதை, நடிப்பு, தொழில் நுட்பம் சொதப்பினால் எந்தப் படமாக இருந்தாலும், அது யார் நடித்த படமாக இருந்தாலும் பிளாப் தான். அந்த வகையில் சமீபத்தில் சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா, வெளியான முதல் நாளே கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இப்படத்திற்கு நெகட்வி கமெண்ட்ஸை அடுத்து, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தியேட்டருக்குள் யூடியூபர்ஸை விட்டதால்தான் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள். அதனால் தியேட்டருக்குள் யூடியூப்பர்களை விமர்சனம் எடுக்க் அனுமதிக்க கூடாது என ஒரு அறிக்கை வெளியிட்டனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மீடியாவும், யூடியூபர்களும் ஏன் படம் பற்றி ரிவியூ எடுக்க கூடாதா? எனக் கேட்டிருந்தனர். இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், சித்தார்த் விஸ்வ நாத் இயக்கத்தில், சமீபத்தில் வெளியான படம் சொர்க்க வாசல். இப்படத்தில் செல்வராகவன், கருணாஸ், சானியா ஐயப்பன், சராப் யு தீன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தின் ரிவியூவை ஆர்.ஜே.பாலாஜியே தியேட்டருக்குச் சென்று மக்களிடம் கேட்டு அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், சொர்க்கவாசல் படத்திற்கு தியேட்டரில் ஆர்.ஜே.பாலாஜி. பப்ளிக் ரிவியூ எடுத்த நிலையில், இவர்களே தடை விதித்து இவர்களே மீறுவார்களாம் என புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளதாவது;
”சென்ற வாரமும் இதேபோல அனுமதி தந்திருந்தால்.. ஜாலியோ ஜிம்கானா, எமக்கு தொழில் ரொமான்ஸ், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களுக்கு உதவியாக இருந்திருக்கும். அனுமதி இல்லாததால் இவை அனைத்தும் வந்ததும் தெரியவில்ல. போனதும் தெரியவில்லை.
இதற்கு திருப்பூர் சுப்ரமணியம் என்ன சொல்லப்போகிறார்? இந்தியன் 2, கங்குவா போன்ற படங்களுக்கு பாதிப்பு என்றால் பல யூட்யூப் சேனல்களுக்கு மாங்கு மாங்கென்று பேட்டி தரும் இவர்கள்.. பப்ளிக் ரிவியூ தடையால் சிறுபடங்கள் கடும் பாதிப்பு அடைவது குறித்து ஏன் பேசவில்லை?
கங்குவாவை திட்டமிட்டு காலி செய்கிறார்கள் என ஓயாமல் பேட்டி தரும் தனஞ்செயன் அவர்களே.. பப்ளிக் ரிவியூவிற்கு சென்ற வாரம் போட்ட தடையை இந்த வாரம் நீக்கியது யார்? ஆர்.ஜே.பாலாஜிக்கு மட்டும் இந்த தடை பொருந்தாதா?
நீதி, நேர்மை, தடை உத்தரவு எல்லாம் வாயில் மட்டும்தானா? செயலில் இல்லையா? பப்ளிக் ரிவியூவிற்கு அனுமதி என முன்பே தெரிந்திருந்தால். நேற்று வெளியான சாதுவன்,மாயன், சைலன்ட், திரும்பிப்பார், பரமன் போன்ற சிறுபடங்களுக்கு உதவியாக இருந்திருக்குமே. இயக்குனர் சீனு ராமசாமி, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு இந்த தடையால் சிறுபடங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி இருந்தனர். அதுதான் தற்போது நடந்துள்ளது.
இந்த இரு வாரங்களில் பத்திற்கும் மேற்பட்ட சிறு படங்கள் சந்தித்த இருட்டடிப்பை இன்னும் எத்தனை வாரம் நீட்டிக்க உத்தேசம்?அடுத்து வரும் புஷ்பா 2, விடுதலை 2, கேம் சேஞ்சர்,விடாமுயற்சி போன்ற பெரிய படங்களின் பப்ளிக் ரிவியூவிற்கு தடை போட உங்களுக்கு துணிச்சல் உண்டா? நிச்சயம் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
நெகட்டிவ் ரிவியூக்களுக்கு எதிராகத்தான் தயாரிப்பாளர் சங்கம் இப்படி தடை விதித்திருந்த நிலையில், புளூ சட்டை மாறனின் இந்த பதிவு விமர்சனத்தை எழுப்பியுள்ளது. தன் விமர்சனங்களில் எப்போதும் நெட்டிவ்வாக கூறி வருவதாக திரையுலகினர் அவர் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில் இப்பதிவு பெரும் விவாத்தை எழுப்பி உள்ளது.