வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனக்குத்தானே ஆப்பு வைத்த RJ பாலாஜி, யோகி பாபு.. மாறி மாறி உண்மையை உளறிய தெய்வங்கள்

பொதுவாக நடிகர்கள் நடிகைகள் எப்பொழுதும் படத்தில் பிஸியாக இருப்பதால் அவர்களுக்கு ஒரு ரிலாக்ஸேசன் வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். அப்பொழுது அவர்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். அப்படி சில செலிப்ரட்டிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தான் கிரிக்கெட்.

அதிலும் சென்னையில் மேட்ச் நடக்கிறது என்றால் அதை நேரடியாக பார்ப்பதற்கு அவர்கள் நேரத்தை செலவிடுவார்கள். அப்படித்தான் நேற்று சென்னை மற்றும் கே கே ஆர் இடையே நடந்த ஐபிஎல் போட்டியை பார்க்க யோகி பாபு போயிருக்கிறார். அது மட்டும் இன்றி பல நாட்களாக கிரிக்கெட்டில் கமெண்ட்ரி செய்யாத ஆர்.ஜே பாலாஜி சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக இணைந்து விட்டார்.

Also read: விஜயின் ஆசையை நிறைவேற்றாத ஆர்.ஜே. பாலாஜி.. மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய்

அதிலும் ஆர்ஜே பாலாஜி கிரிக்கெட் என்றால் அவ்வளவு வெறித்தனமாக பார்க்கக் கூடியவர். அப்படி இருக்கையில் சமீபத்தில் படங்களில் பிசியாக நடித்ததால் கிரிக்கெட் போய் பார்ப்பதற்கு நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. அதனால் இவரும் நேற்று கிரிக்கெட் பார்ப்பதற்கு சென்றிருக்கிறார்.

அப்பொழுது அங்கு இருந்த யோகி பாபு மற்றும் ஆர் ஜே பாலாஜி ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள். பிறகு ஆர்.ஜே பாலாஜி, யோகி பாபுவை கமெண்ட்ரி பண்ண கூப்பிட்டு இருக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் மற்றவர்களை எந்த அளவுக்கு கலாய்த்து பேசுவார்கள் என்று பொது நிகழ்ச்சியில் மேடையில் பேசி இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

Also read: வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

அப்படிப்பட்ட இருவருமே ஒரு நேரத்தில் இருந்தால் நக்கல் அடிப்பதற்கு சொல்லியா கொடுக்கணும். ஆனா என்ன அங்கே கிண்டல் அடிப்பதற்கு யாரும் இல்லாததால் இவர்கள் ஒருவரை ஒருவர் தன்னைத்தானே பேசி கலாய்த்து இருக்கிறார்கள். அதாவது கவுண்டமணி செந்தில் காமெடி போல யோகி பாபு நான் 10th பெயில் என்று சொல்ல அதற்கு ஆர்.ஜே பாலாஜி நான் 12th பெயில் என்று மாறி மாறி உண்மையை கூறி நக்கல் அடித்திருக்கிறார்கள்.

அடுத்து யோகி பாபுவிடம் ஏதோ ஒரு சில வார்த்தைகளை ஆர்.ஜே பாலாஜி இங்கிலீஷில் பேசி இருக்கிறார். உடனே யோகி பாபு எனக்கு இங்கிலீஷ் சுட்டு போட்டாலும் வராது என்னை விட்டு விடுங்கள் என்று அவரிடம் சரண்டர் ஆகி இருக்கிறார். ஆர்.ஜே பாலாஜி நான் மட்டும் என்ன கான்வென்ட்ல படிச்சிட்டு வந்து இருக்கேன். எனக்கு இங்கிலீஷ் வராது என்று மாறி மாறி உண்மைகளை இருவரும் உளறி இருக்கிறார்கள்.

Also read: காசேதான் கடவுளடா படத்திற்கு காசால் வந்த சோதனை.. கோர்ட் ஆர்டரை மீறினாரா யோகி பாபு.?

Trending News