RK சுரேஷின் மலையாள ரீமேக்கான விசித்திரன்.. எப்படி இருக்கு தேறுமா தேறாதா.?

மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஜோசப் என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த விசித்திரன். தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை பத்மகுமார் இயக்கியிருக்கிறார். இயக்குனர் பாலா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

கதையை சொதப்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அவர் இந்த படத்தை அதே இயக்குனரை வைத்து இயக்க வைத்துள்ளார். அதனால்தான் இப்படம் எந்தவிதமான செயற்கைத் தனமும் இல்லாமல் தெளிவாக எடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சிலர் மலையாளத் திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது தமிழ் ரசிகர்களுக்காக அதில் சில விஷயங்களை புகுத்துவார்கள். ஆனால் இப்படம் அப்படி எதுவும் இல்லாமல் ஒரிஜினல் மலையாள படத்தின் கதைக்கருவை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறது.

கதைப்படி போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆர்கே சுரேஷ் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நேர்மையான அதிகாரியாக இருக்கும் அவர் விஆர்எஸ் பெற்று வாழ்ந்து வருகிறார். அவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவருடைய சாவில் இருக்கும் மர்மங்களையும், அதன் முடிச்சுகளையும் அவர் எப்படி கையாளுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஆர்கே சுரேஷ் மற்றும் பூர்ணா இருவரும் இந்த படத்தின் கதைக்கு பக்க பலமாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்கான கேரக்டரை உள்வாங்கி அதை அப்படியே கனக்கச்சிதமாக கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் பூர்ணாவின் நடிப்பு கட்டாயம் பாராட்ட வேண்டிய ஒன்று.

படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், ஜிவி பிரகாஷின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த விசித்திரன் திரைப்படம் ஆர்கே சுரேஷ் நடிப்பிற்காகவும், சிறந்த இயக்கத்திற்காகவும் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய சிறந்த திரைப்படம்.