திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பாலா கூட்டணியில் RK சுரேஷ் மிரட்டும் விசித்திரன் பட டிரைலர்.. ப்ளூ சட்டை மாறனுக்கு விட்ட சவால் ஜெயிக்குமா!

சமீபகாலமாக தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்கே சுரேஷ் பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் தன்னுடைய நடிப்பில் வித்தியாசத்தை காட்டி நடித்துதிருக்கும் விசித்திரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

மலையாளத்தில் பெரிய அளவில் வசூலை வாரி குவித்து ரசிகர்களை கவர்ந்த ஜோசப் திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த விசித்திரன். அந்த படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழ் ரீமேக்கையும் இயக்கியிருக்கிறார். இப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், ஏராளமான விருதுகளையும் வாங்கி குவித்து இருந்தது.

அந்த வகையில் இப்படம் தமிழிலும் ரசிகர்களை கவரும் என்ற எதிர்பார்ப்பில் வரும் மே 6ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் ஆர்கே சுரேஷின் நடிப்பு பயங்கர மிரட்டலாக இருக்கிறது.

ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே இரட்டைக் கொலைகள் உடன் ஆரம்பிக்கிறது. அதை அடுத்து வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் க்ரைம், த்ரில்லர் பாணியில் இருக்கிறது. மாயன் என்ற கேரக்டரில் இளவயது மற்றும் முதுமை வேடம் என ஆர்கே சுரேஷ் அந்த கேரக்டரில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

மேலும் ஸ்டெல்லா என்ற பெண்ணின் கொலை வழக்கை கண்டு பிடிக்க அவர் போராடும் காட்சிகளும், அலட்டல் இல்லாத அவருடைய எக்ஸ்பிரஷன்களும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் இதற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

பூர்ணா, மதுஷாலினி, இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரிஜினல் மலையாள படத்தை பார்த்த ரசிகர்கள் இதன் தமிழ் ரீமேக்கும் அந்த அளவுக்கு மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் சில படங்களை தவறாக  விமர்சனம் செய்கிறார் என்று மேடையில் ஆர்கே சுரேஷ் தாக்கி பேசினார். அதாவது தன்னுடைய படம் ஒன்று வெளி வருவதாகவும் அதனை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று நேரடியாக சவால் விட்டார். அந்த சவாலை விசித்திரன் படம் மூலம் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News