வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வரம்பு மீறிய ராபர்ட் மாஸ்டர்.. வைல்ட் கார்டு என்ட்ரியில் இறங்கப் போகும் தரமான போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டரின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே அவர் சீரியல் நடிகை ரட்சிதாவிற்கு ரூட்டு போட்டு வந்தார்.

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமாக இருக்கும் ரட்சிதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் தற்போது ராபர்ட் மாஸ்டரால் ரட்சிதாவிற்கு கெட்ட பெயர் உருவாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் விவகாரம் தான் சோசியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Also read: பிக்பாஸ் பத்த வச்ச நெருப்பு இப்ப No.1 ட்ரெண்டிங்.. சின்னா பின்னமாகிப் போன அசீமின் ராஜதந்திரம்

ரட்சிதாவை பார்த்த நாளிலிருந்தே ராபர்ட் மாஸ்டர் எனக்கு உங்கள் மீது ஒரு க்ரஷ் இருக்கிறது என்று வெளிப்படையாக கூறினார். அதை தொடர்ந்து அவர் போகும் இடம் எல்லாம் இவரும் பின்னாலேயே திரிந்து கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது என்று தன்னுடைய அன்பை அவர் வெளிப்படையாக காட்டி வந்தார்.

அவரின் நோக்கத்தை புரிந்து கொண்ட ரட்சிதா முடிந்த அளவுக்கு அவரிடம் இருந்து நாசுக்காகவே விலகி இருக்கிறார். மேலும் நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி என்று கூட கூறி பார்த்தார். ஆனாலும் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவை வெளிப்படையாகவே சைட் அடித்துக் கொண்டு திரிகிறார். இதனாலேயே ரசிகர்களுக்கு அவர் மீது கடும் வெறுப்பு உருவாகி உள்ளது.

Also read: யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், பஜாரியை அடித்து துரத்தும் பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்

இந்நிலையில் ரட்சிதாவின் கணவர் கூட இது பற்றி சோசியல் மீடியாவில் ஒரு பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். ஒரு பெண் அமைதியாக இருப்பதால் அவர் எல்லாத்துக்கும் தயார் என்ற அர்த்தமில்லை என தன் மனைவிக்கு வக்காலத்து வாங்கி பேசி இருந்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாகவே பிரிந்து வாழ்கின்றனர்.

இருப்பினும் அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மாஸ்டரின் நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வரம்பு மீறி நடந்து கொள்ளும் மாஸ்டரை தட்டி கேட்க ரட்சிதாவின் கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அந்த வகையில் தற்போது தினேஷிடம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் இதன் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Also read: வாடி போடி, நீ என்ன பெரிய இவளா குழாயடி சண்டையாக மாறிய பிக்பாஸ் வீடு.. தனலட்சுமி டார்கெட் செய்த அடுத்த நபர்

Trending News