விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோபோ சங்கர் தற்போது வெள்ளிதிரையில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார். அவரது மகள் இந்திரஜா சங்கரும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஒரு அழகான அன்பான குடும்பமாக இவர்கள் இருந்து வருகிறார்கள்.
அடிக்கடி இவர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். யார் கண் பட்டதோ இப்போது அவர்களது குடும்பத்தில் மிகப்பெரிய பூதாகர பிரச்சனை வெடித்துள்ளது. அதாவது ரோபோ ஷங்கர் வீட்டில் மூன்று வருடங்களுக்கு மேலாக அலெக்சாண்ட்ரோ கிளிகளை வளர்த்து வந்துள்ளார்கள்.
Also Read : இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்
இதை அறிந்த வனத்துறையினர் அந்தக் கிளிகளை கைப்பற்றிவிட்டு ரோபோ சங்கருக்கும் அபராதம் போட்டுள்ளனர். ஏனென்றால் அனுமதி இன்றி வெளிநாட்டு கிளிகளை வளர்ப்பது சட்ட விரோதமான செயலாகும். இதற்காக ரோபோ ஷங்கர் குடும்பத்தினருக்கு 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதனால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போய் உள்ளது.
இதுகுறித்து ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதாவது இந்த கிளி தங்களுக்கு கிப்டாக வந்ததாகவும், இதற்கான அனுமதி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த கிளிகளை எங்கள் வீட்டில் ஒருவராகத் தான் பாவித்து வளர்த்து வந்தோம்.
Also Read : காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு
அதுமட்டும்இன்றி நாங்கள் அன்றாடம் பணத்தை சம்பாதித்து வாழ்க்கை ஓட்டும் அன்றாட காட்சிகள். இப்படி இருக்கையில் 2 லட்சம் தொகையை எங்களால் கட்டுவது மிகவும் கடினம். மேலும் நாங்கள் வீட்டில் இல்லாத போது வனத்துறையினர் கிளிகளை கைப்பற்றி உள்ளனர்.
நாங்கள் பாசத்துடன் வளர்த்த கிளிகளை பரிதவித்து நிற்கும் நிலையில் இந்த அபராத தொகையும் எங்களால் எப்படி கட்ட முடியும். மேலும் இது குறித்து எங்களுக்குத் தெரிந்திருந்தால் கண்டிப்பாக வெளிநாட்டு கிளிகளை வளர்த்திருக்க மாட்டோம். ஆகையால் வனதுறையினர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரியங்கா சங்கர் வேண்டுகோள் வைத்துள்ளார்.