வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்தவர் வேதனையில் சம்பாதிப்பது ஒரு பொழப்பா? லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரோபோ சங்கர் மனைவி

Robo Shankar: ரோபோ சங்கர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இப்போது குணம் பெற்று இருக்கிறார். மேலும் தான் கடந்த ஐந்து மாதங்களாக பட்ட கஷ்டங்களை யூடியூப் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். இதில் அவரது மனைவி பிரியங்கா ரோபோ சங்கரும் உடன் இருக்கிறார்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான். அளவுக்கு அதிகமாக குடித்ததால் அவருடைய உறுப்புகள் செயலிழந்து விட்டது. இதனால் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்.

Also Read : தற்கொலைக்கு முயன்ற ரோபோ சங்கர்.. சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அதிர்ச்சி காரணம்

ஆனால் அவர் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த போது யூடியூபில் பல பிரபலங்கள் அவரைப் பற்றி மோசமாக பேச தொடங்கி விட்டனர். அதிலும் பத்திரிக்கையாளர்கள் ரோபோ சங்கரை தரகுறைவாக பேசியது அவரையும், அவருடைய மனைவியும் பெரிதாக பாதித்ததாக கூறியிருக்கிறார்கள்.

அதாவது ஒருவர் வேதனையில் இருக்கும் போது அதை வைத்து குளிர் காயும் ஜென்மங்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிப்பது ஒரு பொழப்பா என்று ரோபோ சங்கர் மனைவி விளாசி உள்ளார். மேலும் இந்த உலகத்தில் தப்பே செய்யாத மனிதர்கள் என்று யாருமே இல்லை.

Also Read : மீண்டும் கம்பேக் கொடுத்த ரோபோ சங்கர்.. நோயை விட கொடுமையானது இதுதான்

இப்போது அந்த தப்பை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் ரோபோ சங்கர். ஆனால் சில பத்திரிக்கையாளர்கள் நான் பண்றது தப்பு தான் என தெரிந்தும் கடைசி வரை அதே தப்பை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற மனிதர்களை என்ன செய்வதென்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கிறார் பிரியங்கா ரோபோ சங்கர்.

இந்நிலையில் ரோபோ சங்கர் இப்போது தேறி வந்திருப்பதால் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த இருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னிடம் இருந்த எல்லா கெட்ட பழக்கத்தையும் இப்போது ரோபோ சங்கர் விட்டுவிட்டாராம். சாவின் விளிம்புக்கு சென்று வந்த ரோபோ சங்கரின் இந்த மாற்றம் ரசிகர்களை ஆறுதல்படுத்தி இருக்கிறது.

Also Read : அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன பிராங்ஸ்டர் ராகுல்.. ரோபோ சங்கர் போல் எடுத்த தவறான முடிவு

Trending News