Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பகத் பாசிலின் அஸ்திவாரத்தை அசைக்க வந்த நடிகர்.. விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட கலக்கம்

பகத் பாசிலின் அஸ்திவாரத்தை அசைக்க வந்த நடிகர்.. விஜய் சேதுபதி எஸ் ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட கலக்கம்

பகத் பாசிலுக்கு டஃப் கொடுக்க வந்த முரட்டு வில்லன்.

Tamil Villain Actors: முன்பு நடிகை நஸ்ரியாவின் கணவராக மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த பகத் பாசில், இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். காரணம் புஷ்பா, விக்ரம் போன்ற படங்களின் இவருடைய அட்டகாசமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் பகத் பாசில் தமிழ் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக ஏஜென்ட் அமராக விக்ரம் படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது இவர் அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்று தமிழ் திரை உலகில் நீங்காத இடம் பிடித்து விடுகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த மாமன்னன் ரத்னவேல் என்னும் வில்லன் கதாபாத்திரம் அருமையாக இருந்தது. ஆனால் பகத் பாசிலின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கிறார் திடீரென்று என்ட்ரி கொடுத்த நடிகர் ஒருவர்.  இப்பொழுது தமிழில் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்துக் கொண்டிருக்கும் பகத் பாசில், விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா மூன்று பேரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் அஸ்திவாரத்தை இப்பொழுது அசைக்க வந்துள்ளார் ஜெயிலர் விநாயகன். தற்போது விநாயகனுக்கு தமிழில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரம் தேடி வருகிறது. இவர் ஏற்கனவே திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் படத்தின் மூலம்
மறுபடியும் என்ட்ரி கொடுத்து மிரட்டி விட்டிருக்கிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஜெயிலர் படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் தரமான சம்பவத்தை செய்துள்ளார். இதனால் பகத் பாசில், விஜய் சேதுபதி, எஸ்ஜே சூர்யா போன்ற நடிகர்களின் பட வாய்ப்புகளும் இப்போது ஜெயிலர் விநாயகன் கைவசம் செல்வதால் அவர்களுக்கு இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இனி அடுத்தடுத்து வெளியாகும் டாப் நடிகர்களின் படங்களில் நிச்சயம் விநாயகம் இடம்பெறுவார். அந்த அளவிற்கு இப்போது திரைபிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்களின் மத்தியிலும் அதிகமாக பேசக்கூடிய நடிகராக மாறிவிட்டார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.