சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மீனாவை மதிக்காமல் தன் தலையிலே மண்ணை வாரி போட்ட ரோகிணி.. ஜீவா மூலம் முத்துவுக்கு தெரியவரும் உண்மை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் மற்றும் ரோகிணி காலையிலேயே எழுந்து வீட்டில் பூஜை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதில் விஜயாவும் கலந்து கொண்டு பூஜை பண்ணும் போது அண்ணாமலை என்ன திடீரென்று மனோஜ் பூஜை பண்ண ஆரம்பித்து விட்டான் என்ன விசேஷம் என்று கேட்கிறார். அப்பொழுது அங்கே வந்த முத்து மற்றும் ரவியும் பக்தி முத்தி போய் விட்டதா என்று கேட்கிறார்கள்.

அதற்கு மனோஜ் எதுவும் பேசாமல் அங்க போய் உட்காருங்கள் என்று அனைவரையும் சொல்லி நாங்கள் வீடு வாங்க போற விஷயத்தை சொல்லி இருந்தோம்ல, அந்த வீடு போய் பார்த்துட்டு வந்துட்டோம். வீடு எங்களுக்கு ரொம்பவே பிடிச்சு போச்சு, அந்த ஓனரையும் பார்த்து பேசி விட்டோம். மொத்தம் அந்த வீட்டின் மதிப்பு 5 கோடி, ஆனால் அவருக்கு துபாயில் அவசரமாக வேலை இருப்பதால் மூன்று கோடிக்கு எங்களுக்கு கொடுத்துவிட்டு போகிறார் என்று சொல்கிறார்.

உடனே முத்து, யாரா இருந்தாலும் இடத்திற்கும் வீட்டிற்கும் வாங்கின மதிப்பிலிருந்து அதிகமாக தான் விப்பாங்க, இது என்ன புதுசாக இருக்கிறது அது நல்லா விசாரிச்சிட்டியா இல்லனா பேய் வீடாக இருக்கப் போகிறது என்று சொல்கிறார். இதை கேட்டு பயந்து போன மனோஜ், ரோகிணியை பார்த்து முழிக்கிறார். உடனே ரோகிணி இப்படித்தான் தேவையில்லாத சில வார்த்தைகள் எல்லாம் வரும் நாம் அதை எல்லாம் கண்டுக்க கூடாது.

என்ன சொல்ல வந்தோமோ அதை சொல்லிட்டு நம்ம வேலையை பார்க்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக நாம் அனைவரும் குடும்பத்துடன் இரண்டு நாள் தங்கி பார்க்க வேண்டும் என்று ஓனர் ஆசைப்படுகிறார். அதனால் நம் அனைவரும் போகலாம் என்று மனோஜ் கூப்பிடுகிறார். இதற்கு ரவி மற்றும் சுருதி மறுத்த நிலையில் மீனா மற்றும் முத்து அவர்களை பேசி சம்மதிக்க வைத்து விட்டார்கள்.

அடுத்ததாக மீனா, அவருடைய அம்மாவை சந்திப்பதற்கு கோவிலுக்கு போகிறார். கோயிலுக்கு ரோகினி மற்றும் மனோஜ் ஓனரை சந்தித்து பணம் கொடுக்க வந்திருக்கிறார்கள். அப்பொழுது ரோகிணியை பார்த்து மீனா என்ன திடீர்னு கோயிலுக்கு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி நாங்கள் வாங்க போற வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கிறோம். இங்கே தான் ஓனர் வருவதாக சொல்லி இருக்கிறார் என்று சொல்லி போய் விடுகிறார்.

அப்படி ரோகிணி பணம் கொடுக்கப் போகும் பொழுது ஒரு நிறைகுடம் தண்ணீர் ரோகிணி தட்டிகீழே விழுந்து விடுகிறது. இதை பார்த்த மீனாவின் அம்மா இது அபசகுனமாக தெரிகிறது. ஆனால் நம்ம சொன்னால் தேவையில்லாத பிரச்சினை தான் வரும் என்று சொல்லி போய் விடுகிறார். இருந்தாலும் மீனாவிற்கு மனசு கேட்காததால் ரோகிணி பணம் கொடுக்கப் போகும் பொழுது மீனா ரோகினி கூப்பிட்டு இன்னைக்கு வேண்டாம் இன்னொரு நாள் பார்த்து கொடுங்க என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் ஓனர் கொஞ்சம் ஓவராக சீன் போட்டதால் ரோகிணி நம்ம வாங்குவது மீனாவுக்கு பிடிக்கவில்லை அதனால் பொறாமையில் சொல்லுவார். இதையெல்லாம் கண்டுக்க வேண்டாம் நம் பணத்தை கொடுக்கலாம் என்று மனோஜிடம் சொல்லி அந்த ஏமாற்று கும்பல் இடம் 5 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டார்கள். அடுத்ததாக முத்து, ஜீவாவை பிக்கப் பண்ணிட்டு ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீசுக்கு போகிறார்.

அதே ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு ரோகிணி மற்றும் மனோஜ் வந்திருக்கிறார்கள். இவர்களை பார்த்த ஜீவா கொஞ்சம் கடுப்பான நிலையில் காருக்குள் இருந்து புலம்புகிறார். உடனே முத்து உங்களை யார் ஏமாற்றி பணத்தை பறித்தார் என்று கேட்ட நிலையில் ரோகிணி மற்றும் மனோஜை கைகாட்டி எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். அதன் பிறகு முத்துவுக்கு மனோஜ் ஷோரூம் ஆரம்பித்து இருப்பது அப்பாவின் பணத்தால் தானா என்று தெரிந்து விட்டது.

அந்த வகையில் ரோகிணி மற்றும் மனோஜ் செய்த தில்லாலங்கடி தற்போது அப்பட்டமாக வெளிவரப் போகிறது. அப்படி என்றால் ரோகிணி அவங்களுடைய அப்பா கொடுத்தது என்று சொன்னது பொய். அது மட்டும் இல்லாமல் அதே நேரத்தில் அந்த ஏமாற்று குடும்பத்தில் அட்வான்ஸ் பணமாக 30 லட்சம் ரூபாயை கொடுத்து மொத்தத்தையும் ஏமாந்து கடனாளியாக நிற்கப் போகிறார்கள்.

Trending News