வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

முத்துவை டைவர்ட் பண்ணி ஆதாரத்தை திருடிய ரோகினி.. மொத்தத்தையும் சொதப்பிய மீனா, எஸ்கேப் ஆகிய சத்தியா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி தினேஷ் தொந்தரவில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக லோக்கல் ரவுடி சிட்டி, கேட்ட வீடியோவை திருடுவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் மீனா வீட்டில் கொலு வைத்திருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டார். அதனால் வரப்போகிற நாளில் ரோகினி கலந்து கொள்ளும் விதமாக டான்ஸ் ப்ரோக்ராம் நடத்தப் போகிறார்.

அதற்காக ரோகிணி, வித்யாவிடம் ஒரு பிளான் சொல்லி வைத்திருக்கிறார். அதன்படி தாண்டியா ஆட்டம் ஆடுவதற்கு ஆட்களையும் பொருட்களையும் வாங்கிட்டு வீட்டிற்கு வந்துவிடு. அப்படி அவர்கள் ஆடும்போது முத்து மீனாவும் சந்தோஷமாக ஆடிக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது நைசாக முத்துவிடம் பேசி அவருடைய போனை வாங்கி நீ வீடியோ எடுக்கிறேன் என்று சொல்லிவிடு.

போட்ட பிளானில் தோல்வியை பார்த்து வரும் ரோகிணி

அந்த சமயத்தில் அவருடைய போனிலிருந்து சத்யாவின் வீடியோவை என்னுடைய போனுக்கு அனுப்பி வைத்து விடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். இதன்படி காய் நகர்த்துவதற்கு ரோகிணி மற்றும் வித்யா தயாராகி விட்டார்கள். இதற்கிடையில் ரோகினி மற்றும் மனோஜ், விஜயாவிற்கு புடவை வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். இதை பார்த்ததும் விஜயா, ரோகிணியை அனைவரும் முன்னணியும் பெருமையாக பேசுகிறார்.

வழக்கம் போல் மீனாவையும், பூக்கட்டும் தோழிகளாக இருக்கும் நபர்களையும் திட்டி அவமானப்படுத்தி பேசுகிறார். அத்துடன் ரோகிணி ஆன்லைன் மூலமாக மேக்கப் சொல்லிக் கொடுக்கும் பிசினஸ் பண்ணப் போகிறார். அதற்காக போர்டு ஒன்றை ஏற்பாடு பண்ணி வி என்ற விஜயாவின் பெயரை வைத்து அங்கு இருப்பவர்கள் அனைவரது முன்னாடியும் விஜயாவிடம் கொடுக்கிறார்.

இதை பார்த்ததும் விஜயா சந்தோஷத்தில் ரோகினியை புகழ்ந்து தள்ளி விடுகிறார். இப்படியே ரோகிணி, மனோஜ் மற்றும் விஜயாவை ஐஸ் வைத்துக் கொண்டே இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரோகிணி போட்ட பிளான் படி வித்தியா டான்ஸ் ஆடுபவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். அவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது போட்ட பிளான் படி முத்துவின் ஃபோனில் இருக்கும் வீடியோவை ரோகிணி அவருடைய போனுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்.

ஆனால் அதற்குள் மீனா மற்றும் முத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது மீனா ஓடி அடுப்பாங்கரைக்கு போகும் பொழுது ரோகிணி கையில் இருக்கும் போன் கீழே விழுந்து உடைந்து விடுகிறது. இதனால் அதில் இருக்கும் வீடியோவும் இல்லாமல் போகப் போகிறது. கடைசியில் ரோகினி போட்ட பிளான் படி எதுவும் நடக்காமல் மீனா அனைத்தையும் கச்சிதமாக சொதப்பி விட்டார். இதில் இருந்து சத்தியாவும் ஒரு வழியாக தப்பித்து விட்டார். அந்த வகையில் இனி ரோகிணி மாற்றப்போகும் கதை தான் அடுத்தடுத்து வரப்போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News