வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

விஜயா வீட்டு வேலைக்காரியாக மாறப்போகும் ரோகினி.. முத்துவிடம் சிக்கிய கசாப்பு கடை மணி, ஐடியா கொடுக்கும் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜின் ஷோரூம் பிரச்சனையை தீர்த்து வைக்கும் விதமாக ரோகினி நகையை விற்று பணத்தை ஏற்பாடு பண்ணி ஷோரூம் மற்றும் மனோஜையும் காப்பாற்றி விட்டார். அத்துடன் இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டாம். உங்க அம்மாவுக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். உடனே மனோஜ் நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று தலையை ஆட்ட ஆரம்பித்து விட்டார்.

அடுத்ததாக வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிடம் கிரிஷையும் க்ரிஷ் பாட்டியையும் பார்த்தேன். அப்பா வேலை பார்க்கும் ஸ்கூலில் தான் கிரிஷ் படிக்கிறான். அங்கே தான் அவனுடைய வீடும் இருக்கிறது என்று பாட்டி சொன்னாங்க என அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் ரோகிணி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த முத்துவும் மீனாவும் திருந்தவே மாட்டார்களா?

எப்ப பார்த்தாலும் என்னுடைய விஷயத்தில் தலையிடுவதே அவர்களுக்கு வேலையா போச்சு என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி மீனாவும் எனக்கு கிரிசை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என சொல்கிறார். உடனே முத்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போய் பார்த்து பேசிட்டு வரலாம் என பேசி முடிக்கிறார்கள்.

அப்பொழுது ரவி மற்றும் ஸ்ருதி வேலையை முடித்துவிட்டு சேர்ந்து வருவதை பார்த்ததும் முத்து என்ன ரெண்டு பேரும் ஒன்றாக வரீங்க என்று கேட்கிறார். அதற்கு ரவி, சுருதி பார்ட் டைம் வேலையாக என்னுடைய ஹோட்டலில் சேர்ந்துவிட்டாள் என்று சொல்கிறார். உடனே மீனா உங்களால் எல்லா வேலையும் பார்க்க முடியுமா? உங்களுக்கு தெரியுமா என்று கேட்ட நிலையில் இதுவும் நன்றாக தான் இருக்கிறது ஈசியாக கற்றுக் கொள்வேன் என்று சுருதி சொல்கிறார்.

நீங்கதானே சொன்னீங்க கணவன் மனைவி என்றால் அவர்கள் ஒன்றாக இருக்கும் நேரம் அதிகரிக்க வேண்டும் என்று அதனால் தான் நான் ரவியோட ஹோட்டலில் சேர்ந்து கொண்டேன். இனி பார்க்கிற நேரம் பார்த்துக்கலாம் பேசிக்கிற நேரத்தில் பேசிக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்கள். அடுத்ததாக முத்து சொன்னபடி வீட்டு வாசலில் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கப்படும் என்று போர்டு வைத்து விட்டார்.

அத்துடன் இரண்டு காரையும் நிப்பாட்டி பூஜை பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். அப்பொழுது அண்ணாமலை பெயரில் ஆரம்பித்ததால் விஜயா நீங்களே பூஜை பண்ணுங்க, என் பெயரில் ஆரம்பிக்கல என்று சொல்லியதும் நம்முடைய பிள்ளை நன்றாக வளரனும் என்று முழு மனதுடன் ஆசீர்வாதம் பண்ணி பூஜை பண்ணு என்று சொல்கிறார். உடனே விஜயாவும் காருக்கு எல்லாத்துக்கும் பூஜை பண்ணி முடிக்கிறார்.

அந்த வகையில் முதல் கஸ்டமர் ஆக மீனா கார் படிப்பதற்கு சேர்ந்து விடுகிறார். அதற்காக பணத்தையும் செக் மூலமாக முத்துவிற்கு கொடுத்து விடுகிறார். இப்படி இவர்களுடைய வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்ததாக பரசுராமன் விஷயத்தில் கசாப்பு கடை மணி, முத்து மற்றும் மீனா கண்ணில் சிக்கப் போகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாலும் மீனா மற்றும் முத்துவுக்கு ஏற்கனவே மணி மேல் சந்தேகம் இருந்ததால் நிச்சயம் இந்த முறை தப்பிக்க முடியாது.

அதனால் மணி மூலம் ரோகிணி அப்பா மலேசியாவும் இல்லை,பணக்கார வீட்டு பெண்ணும் இல்லை சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவள் தான் என்ற உண்மை தெரிந்து விடும். அதன் பிறகு என்னதான் விஜயாவுக்கு பிடித்த மருமகளாக ரோகிணி இருந்தாலும் பணம் வசதி இல்லை என்றால் நிச்சயம் விஜயா, மீனாவை மாதிரி ஒரு வேலைக்காரி போல தான் ரோகிணியே நடத்தப் போகிறார். இதுதான் ரோகினிக்கு அடுத்து விழப்போகும் மிகப்பெரிய அடியாக இருக்கப் போகிறது.

Trending News