புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முத்துவிடம் சிக்க போகும் ரோகினி.. மனோஜை நம்பி ஓவராக ஆட்டம் போடும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பொய் பித்தலாட்டம் பண்ணி எப்படியோ ரோகினி நினைச்சதை நடத்திக் காட்டிவிட்டார். அதாவது அண்ணாமலை பணத்தை ஜீவாவிடம் இருந்து வாங்கி அதை அனைவரிடமும் மறைத்து அப்பா கொடுத்ததாக பொய் சொல்லி மனோஜ்க்கு பிசினஸ் பண்ணுவதற்கு வழிகாட்டி விட்டார்.

இது எதுவும் தெரியாமல் ரோகிணியை கண்முடித்தனமாக விஜயா நம்புகிறார். அதற்கு ஏற்ற மாதிரி விஜயா மனசை குளிர வைக்க ஷோரூம் கடையை திறக்கும் விதமாக விஜயாவை வைத்து பங்க்ஷனை வெற்றிகரமாக முடித்து விட்டார். விஜயாவும் இதுதான் எனக்கு சந்தோசம் என்று சொல்வதற்கேற்ப ஓவர் குஷியில் கடையை ஓபன் பண்ணி விட்டார்.

தெனாவட்டு காட்டும் மனோஜ்

அங்கே வந்த ஸ்ருதி அம்மாவிற்கு அதிக வரவேற்பு கொடுத்து மீனாவின் குடும்பத்தை மட்டம் தட்டி பேசி விட்டார். பிறகு கடையில் வந்த அனைவரும் எல்லாத்தையும் சுற்றி பார்த்து முதன்முதலாக ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பொருட்களை வாங்குகிறார்கள். அப்பொழுது ஸ்ருதி அம்மா பணக்கார திமிரை காட்டும் விதமாக ஏசி ஒன்றை வாங்குகிறார்.

மீனாவும் விலை கம்மியாக இருக்கும் மிக்ஸி ஒன்றை வாங்குகிறார். இதை பார்த்து வழக்கம் போல் மீனாவை அசிங்கப்படுத்தி விஜயா பேசுகிறார். இதை பார்த்த பாட்டி விஜயாவிடம் என்ன திமிரு கொஞ்சம் ஓவராக இருக்கிறது. உன் வீட்டுக்கு வந்த மருமகளை இப்படித்தான் நீ நடத்துவியா என்று லெப்ட் அண்ட் ரைட் கொடுத்து விட்டார்.
ஆனாலும் இதற்கெல்லாம் அசரக்கூடியவரா விஜயா.

பிறகு மீனா வாங்கிய பொருளுக்கு பில் போடும் பொழுது விஜயா நீ வாங்கின சின்ன தொகை முதன் முதலில் பில் போடுவாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொல்லி சுருதி அம்மா வாங்கின பொருளுக்கு பில் போட சொல்கிறார். இதை கேட்ட மனோஜும் வெறும் 5000 ரூபாய்க்கு எல்லாம் பில் போட முடியாது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று தெனாவட்டாக மீனாவை அசிங்கப்படுத்துகிறார்.

அதற்கு பாட்டி மனசு தான் முக்கியம், மீனாவின் மனசும் கை ராசியும் கண்டிப்பாக நீ நல்லா வருவ என்று சொல்கிறார். பிறகு வேண்டாம் வெறுப்பாக மீனா வாங்கிய பொருளுக்கு பில் போடுகிறார். இதனை தொடர்ந்து ஒவ்வொருவரும் வாங்கிய பொருளுக்கு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்குகிறார்கள். பிறகு மனோஜ் முதலாளி தோரணையில் உட்கார்ந்து கொண்டு அங்கு வேலை பார்த்த ஊழியர்களை மட்டம் தட்டி பேசி அவர்களை வேலை விட்டு நிப்பாட்டி விடுகிறார்.

அவர்களும் உங்க கடை நீங்க என்ன வேணாலும் முடிவு எடுக்கலாம் என்று சொல்லி இவர் எல்லாம் எங்கே முன்னேற போகிறார் என்று புலம்பிக்கொண்டு வெளியே போய் விடுகிறார்கள். பிறகு வீட்டிற்கு திரும்பிய மனோஜ் ஓவராக கெத்து காட்டுகிறார். அத்துடன் விஜயா இவர்களுக்கு ஆரத்தி எடுக்கும் விதமாக மனோஜ் மற்றும் ரோகிணியை வரவேற்கிறார்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையில் நேரமாகியும் மனோஜ் எழுந்திருக்க வில்லை. இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக நிற்கும் நிலையில் விஜயா மனோஜை எழுப்ப முயற்சி பண்ணுகிறார். ஆனால் இந்த சோம்பேறி மனோஜ் சொகுசாக படுத்துக்கிட்டு எழுந்திருக்க அடம் பிடிக்கிறார். இவரை வைத்து விஜய் டிவியில் 5 சீரியலில் நடிக்கும் டோரா புஜ்ஜி.. சிறகடிக்கும் ஆசை மூலம் பிரபலமான ஜீவாகடை எந்த அளவுக்கு முன்னேற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதற்கிடையில் ரோகிணி பண்ணிய தில்லாலங்கடி வேலை முத்துக்கு கூடிய விரைவில் தெரிய வரப்போகிறது. அந்த வகையில் முத்துவிடம் கையும் களவுமாக சிக்க போகிறார். அது மட்டும் இல்லாமல் மனோஜ் நம்பி ஓவராக ஆட்டம் போடும் விஜயாவிற்கும் சரியான பதிலடி கொடுக்கும் விதமாக அந்த பணத்தைப் பற்றிய ரகசியங்கள் தெரிய வரப்போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் ஏற்படும் குளறுபடிகள்

Trending News