வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜயா காதில் பூ சுத்த போகும் ரோகினி, சரண்டர் ஆன மனோஜ்.. மீனா பட்ட அவமானத்திற்கு பதிலடி கொடுத்த முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவுக்கு மனோஜ் மற்றும் ரோகிணி தில்லாலங்கடி வேலைகளை பார்த்து பணத்தை ஆட்டைய போட்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்ததும் கையும் களவுமாக சிக்க வைக்க வேண்டும் என்று ஜீவாவை நேரடியாக வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விட்டார்.

வந்ததும் மனோஜை ஒரு குற்றவாளி போல் நிறுத்தி அதற்கு தீர்ப்பு சொல்ல விஜயாவை கூப்பிட்டார். பிறகு மனோஜ் 27 லட்சம் பணத்தை ஏமாந்தது நமக்கு தெரியும். ஆனால் அந்த பணத்தை வட்டி முதலுமாக முப்பது லட்சம் ரூபாயாக வாங்கிட்ட விஷயத்தை நம்மிடம் மறைத்து விட்டார் என்ற உண்மை முத்து அனைவரிடமும் சொல்கிறார்.

உடனே மனோஜ் இதிலிருந்து எஸ்கேப்பாக வேண்டும் என்பதற்காக இவன் ஏதோ உலறுகிறான். எனக்கு ஷோரூமில் நிறைய வேலை இருக்கிறது நான் கிளம்புகிறேன் என்று நைசாக நழுவ பார்த்தார். ஆனால் முத்து, நீ மட்டுமில்லாமல் இந்த பித்தலாட்டத்துக்கு உன் மனைவி பார்லர் அம்மாவும் துணையாக தான் இருந்திருக்கிறார் என்று ரோகிணி பற்றியும் சொல்லிவிட்டார்.

உடனே ரோகிணி, இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக முத்து தேவை இல்லாமல் பொய் சொல்லி எங்கள் மேல் பழி தூக்கி போடுகிறார். அவரிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே முத்து ஆதாரம் இல்லாமல் உங்களிடம் பேச முடியுமா என்று சொல்லி ஜீவாவை கூப்பிட்டு விட்டார்.

ஜீவா வருவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரோகிணி மற்றும் மனோஜ், ஜீவாவை பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டார்கள். ஜீவா உள்ளே நுழைந்து நடந்த உண்மையை சொல்லி அதற்கு வட்டி மூலமாக 30 லட்சம் பணத்தை ஆறு மாசத்திற்கு முன்னாடி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொடுத்து விட்டேன். அதற்கான ஆதாரங்கள் என்று சொல்லி மொத்த ஆதாரத்தையும் காட்டி விட்டார்.

இனிமேல் இவர்களிடம் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதற்கு ஏற்ப வசமாக ரோகிணி மற்றும் மனோஜ் சிக்கிவிட்டார்கள். உடனே விஜயா, மனோஜ் சட்டையை பிடித்து எப்படிடா எங்களை ஏமாத்த தோணுச்சு. என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை என்று கேட்க ஆரம்பித்த பொழுது மனோஜ் இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் அம்மாவிடம் சரண்டர் ஆக வேண்டும் என்று முடிவு பண்ணி எதுவுமே எனக்கு தெரியாது எல்லாமே ரோகிணி கொடுத்த ஐடியா தான் என்று பொண்டாட்டி மேல் பழியை போட்டு விட்டார்.

உடனே விஜயா, ரோகினிடம் இவ்வளவு விஷயம் நடந்தும் நீ எப்படி எங்களிடம் உண்மையை மறைத்தாய். அதிலும் எங்க அப்பா தான் 30 லட்சம் பணத்தை கொடுத்தார் ஷோரூம் ஆரம்பிப்பதற்கு என்று எவ்வளவு பொய் சொன்னாய் என கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டார்.

பிறகு ரோகினிக்கு இதிலிருந்து தப்பிப்பதற்கு பல தில்லாலங்கடி வேலைகள் தெரியும். அதனால் மனோஜ் அப்பொழுது வேலையில்லாமல் பார்க்கில் சும்மா இருந்ததனால் அந்த பணத்தை வைத்து ஷோரூம் ஆரம்பிக்கலாம் என முடிவு பண்ணிட்டோம் என ரோகிணி கூறிவிட்டார். அதற்கு விஜயா அப்படி ஒரு ஐடியா இருந்துச்சு என்றால் நீ என்னிடம் சொல்லி இருக்கணும் நாங்களே அந்த பணத்தை கொடுத்து இருப்போம் என விஜயா கூறினார்.

உடனே ரோகிணி, நீங்கள் இதுவரை அவருக்கு என்ன பண்ணுனீங்க இனிமேலும் என்ன பண்ணிட போறீங்க. அதனால்தான் அந்த பணத்தை நாங்களே யூஸ் பண்ணிக்கிட்டோம் என தெனாவட்டாக ரோகினி பதில் கொடுத்தார். இதை கேட்டதும் இன்னும் கோபமான விஜயா, என் பையனுக்கு நான் எதுவும் பண்ணலையா என்று மறுபடியும் கோபத்தில் ரோகிணியே அறைந்து விட்டார்.

இத்தனை நாளாக மீனாவை மட்டமாக வேலைக்காரி மாதிரி நடத்தி வந்த விஜயா, ரோகிணி பற்றிய விஷயங்கள் தெரிந்ததும் பத்ரகாளி ஆக மாறிவிட்டார். இவ்வளவு நாளாக மீனா பட்ட அவமானத்திற்கு இதுதான் சரியான பதிலடி என்பதற்கேற்ப முத்து தரமான சம்பவத்தை செய்து விட்டார்.

ஆனாலும் இந்த விஷயத்தில் இருந்து எப்படி ரோகிணி தப்பிக்க முடியும் என்பது அவருக்கு தெரியும். அதனால் விஜயா காதில் ஏதாவது பூ சுற்றும் அளவிற்கு பொய்களை சொல்லி செண்டிமெண்டாக பேசி அனைவரையும் நம்ப வைத்து விடுவார். ஆனாலும் அந்த ஷோரூம் முழுக்க முழுக்க அண்ணாமலையின் பணம் என்பதால் அதற்கு ஆப்பு வைக்குமாறு முத்து ஒரு முடிவெடுக்க வேண்டும்.

அதோடு நிறுத்தாமல் பிரவுன் மணி யார் என்கிற விஷயத்தையும், கிரிஷ் பற்றிய விஷயங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். ரோகினி வசமாக சிக்கிக் கொண்டு மனோஜ் மற்றும் விஜயா மூஞ்சில் கரியை பூச வேண்டும்.

Trending News