புதன்கிழமை, ஜனவரி 8, 2025

முத்து மீனாவிடம் பொட்டி பாம்பாக அடங்கும் ரோகிணி.. விஜயாவுக்கு ஏழரை ஆரம்பமாக போகுது

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவிற்கு வீட்டில் கொழு பூஜை பண்ண வேண்டும் என்று ஆசை. ஆனால் விஜயா சம்மதிக்க மாட்டார் என்று தெரிந்ததும் முத்துவிடம் எப்படியாவது அத்தையிடம் பெர்மிஷன் வாங்கி கொடுங்கள் என்று கேட்கிறார். ஆனால் முத்து, சொன்னாலும் விஜயா கேட்க மாட்டார் என்பதால் அண்ணாமலையை வைத்து காரியத்தை சாதித்து விட்டார்கள்.

அதன்படி விஜயா கொழு வைப்பதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். இதை தோழி பார்வதி வீட்டிற்கு வந்து புலம்பி சொல்கிறார். அதற்கு விஜயாவின் தோழி பார்வதி, வீட்டில் கொழு பூஜை நடத்துவது ரொம்பவே நல்லது தான். அதனால் மீனா ஆசைப்பட்ட மாதிரி நடத்தட்டும், அனைவரும் விஜயா வீட்டில் கொழு வைத்திருக்கிறார்கள் என்று தான் பேசுவார்கள். அது உனக்கு பெருமை தானே என்று சொல்லி சமரசம் செய்கிறார்.

பக்கவாக பிளான் பண்ணி காய் நகர்த்தும் ரோகினி

அப்பொழுது மீனா சாப்பாடு கொண்டுட்டு விஜயாவின் தோழி வீட்டுக்கு வருகிறார். வரும்பொழுது ரூம்குள் ஏதோ சத்தம் கேட்கிறது என்று திறந்து பார்க்கிறார். அங்கே விஜயாவிடம் இருந்து பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வந்த காதல் ஜோடிகள் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். பிறகு மீனா அவர்களை திட்டி கத்துகிறார்.

கீழே சத்தம் கேட்கிறது என்று மாடியில் இருந்து இறங்கி வந்த விஜயா மற்றும் பார்வதி என்ன ஆச்சு என்று மீனாவிடம் கேட்கிறார். மீனா நடந்ததை சொல்லும்பொழுது அந்த காதல் ஜோடிகள் எங்க மேலே எந்தத் தவறும் இல்லை. நாங்கள் பிராக்டிஸ் தான் எடுத்துக்கொண்டோம். இவர் தான் தப்பாக புரிந்து கொண்டார் என்று மீனா மீது பழியை போட்டு விட்டார்கள்.

பிறகு வழக்கம் போல் அனைவரையும் முன்னாடியும் விஜயா, மீனாவை தான் திட்டி அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்து விட்டார். இப்பொழுது விஜயாவுக்கு புத்தி இல்லை என்றாலும் இந்த காதல் ஜோடிகளால் பிரச்சனை வரும் பொழுது ஜெயிலுக்குப் போகும் சூழ்நிலை ஏற்படும் போது மீனா சொன்னது ஞாபகத்துக்கு வரும். அப்பொழுது இந்த மீனா முத்து தான் விஜயாவை காப்பாற்ற வருவார்கள்.

அந்த வகையில் கூடிய சீக்கிரத்தில் விஜயாவுக்கு ஏழரை பிரச்சனை ஆரம்பிக்க போகிறது. இதனை தொடர்ந்து மீனா வீட்டில் கொலு வைப்பதற்காக தேவையான பொம்மைகளை வாங்கிட்டுவந்து அடுக்கி வைக்கிறார். இதை பார்த்த மனோஜ் கிண்டல் பண்ணி ரோகினிடம் நல்லவேளை இதுக்கு நம்மிடம் பணம் கேட்காமல் இருந்தால் சரி தான் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் முத்து மற்றும் மீனா, மனோஜ் ரோகினி இடம் பணம் கேட்கிறார்.

அதற்கு மனோஜ் நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும். இது உங்க இஷ்டப்படி நடத்துறீங்க என்று சொல்கிறார். ஆனால் ரோகிணி மனோஜை திட்டும் விதமாக இது ஒரு நல்ல காரியம் வீட்டில் நடக்கிறது பெரிய விஷயம். அதனால் அவர்கள் சொன்னபடி நாம் பணத்தை கொடுத்து அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று முத்து மற்றும் மீனா சொல்வதற்கு ஏற்ப பொட்டி பாம்பாக அடங்கி ஜால்ரா அடித்து பேசுகிறார்.

ஆனால் இதற்கு பின்னாடி ஏதோ ஒரு பிளான் வைத்து தான் ரோகிணி காய் நகர்த்துகிறார் என்பது தெரிகிறது. அடுத்ததாக மீனா, ரவி ஸ்ருதியிடம் பேசி கொலு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நாம் பண்ண வேண்டும் என்று பணத்தை கேட்கிறார். உடனே சுருதி அதற்கு தேவையான காசை கொடுத்து விடுகிறார். பிறகு சுருதி மற்றும் மீனா இருவரும் சேர்ந்து எப்படி வைக்கலாம் என்று முத்துவிடம் டிஸ்கஸ் பண்ணி பிளான் பண்ணுகிறார்கள்.

இதற்கு இடையில் ரவியின் செயல்கள் வித்தியாசமாக இருப்பதால் ஸ்ருதி கொஞ்சம் கடுப்பாகிறார். அதிலும் ஹோட்டல் ஓனர் பொண்ணு உரிமையாக ரவியிடம் பேசிப் பழகுவது ஸ்ருதியின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சுருதி இடம் வந்து இந்த விஷயத்தை கொஞ்சம் சீரியசாக எடுத்து, ரவியை அந்த பெண்ணிடம் பழகாதபடி பார்த்துக் கொள் என்று எச்சரித்து இருக்கிறார்.

அதனால் சுருதிக்கும் அவ்வப்போது ரவி மீது கோபம் வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி ரவியும் வீட்டிலும் அந்த ஓனர் பொண்ணை பற்றி பெருமையாக பேசி சுருதியை கடுப்பேற்றுகிறார். அந்த வகையில் இந்த பிரச்சனை எந்த அளவிற்கு போய் முடிய போகிறது என்பது தெரியவில்லை. ரோகினி தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இயக்குனர் கவனம் செலுத்தி வருகிறார் என்பது புரிகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News