வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

மனோஜை காப்பாற்ற களத்தில் குதிக்கும் ரோகிணி.. முத்து மீனாவுக்கு சப்போர்ட்டாக சிஐடி வேலை பார்க்கும் சுருதி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் மற்றும் விஜயா இருவரும் சேர்ந்துதான் மீனாவின் நகையை எடுத்து இருக்கிறார்கள். அதை சமாளிப்பதற்காக கவரிங் நகை வைத்து கமுக்கமாக இருக்கிறார்கள் என்பது முத்துவிற்கு நன்றாக தெரிந்து விட்டது. ஆனால் இதை கையும் களவுமாக பிடித்து மனோஜ் வாயாலேயே உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து முயற்சி எடுத்து வருகிறார்.

அந்த வகையில் மனோஜ், போலீஸ் ஸ்டேஷனில் பேசும் பொழுது எடுத்த வீடியோவை வீட்டில் அனைவரிடமும் போட்டுக்காட்டுகிறார். இதை தெரிந்ததும் மனோஜ் ஏமாந்து போயிருக்கிறார் என்பது ரோகினிக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் அதை எப்படி சரி செய்தார் என்பதை சொல்ல வரும் பொழுது விஜயா, அதை சொல்ல விடாமல் தடுக்கும் பொருட்டாக மனோஜை அடித்து கடன் வாங்கினியா என்று ஒரு லீட் எடுத்து கொடுத்து விட்டார்.

மனோஜ் மீது ஸ்ருதிக்கு வந்த சந்தேகம்

அதன்படி உஷாரான மனோஜ் என்னுடைய நண்பரிடம் வட்டிக்கு நாலு லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டேன் என்று சொல்லி சமாளித்து விட்டார். ஆனாலும் முத்துவிற்கு மனோஜ் மீது இருந்த சந்தேகம் தீரவில்லை. உடனே மனோஜ் கடன் வாங்கின நண்பரை சந்தித்து விசாரிக்கலாம் என்று பார்க்குக்கு போகிறார். அங்க போய் முத்து, மனோஜ் நண்பரிடம் எதார்த்தமாக பேசின நிலையில் அவர் லட்சக்கணக்கில் கடன் கொடுக்கக்கூடிய தகுதி இல்லை என்பதை புரிந்து கொண்டார்.

அத்துடன் மனோஜ்க்கும் இவர் கடன் கொடுக்கவில்லை என்பதையும் தெரிந்து கொண்டார். அந்த வகையில் எப்படியும் மீனாவின் நகையை தான் விற்று அதை ரெடி பண்ணி இருக்கிறார்கள். இதற்கு உடந்தையாக அம்மாவும் இருந்திருக்கிறார் என்பதை முத்து உணர்ந்து விட்டார். இதனை மீனாவிடம் சொல்லி என்ன பண்ணலாம் என்பதற்கு ஐடியா கேட்கிறார்.

அதற்கு மீனா வெற்றிலையில் மை வைத்து தடவி பார்த்தால் யார் எடுத்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம் என சொல்கிறார். இப்படி மீனா சொல்லியதை கேட்ட முத்துவுக்கு வேறு ஒரு ஐடியா வந்துவிட்டது. அந்த வகையில் மாந்திரீகம் மூலம் ஒரு எலுமிச்சை பழத்தை கொண்டு வந்து அதை பூஜை ரூமில் வைத்தால் யாருக்காக நகை எடுத்து கவரின் நகை வைத்தால் என்பது தெரிந்துவிடும்.

ஏனென்றால் அப்படி எடுத்து மாற்றி வைத்தவர்கள் வாய் இழுத்துக் கொண்டு கோணவாயாக மாறிவிடும் என்று முத்து வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்கிறார். உடனே விஜயா மற்றும் மனோஜ், கோனவாய் போல் மாறினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறார்கள். இதனை இரண்டு பேருமே பதட்டத்துடன் பயம் கலந்து நிற்கும் பொழுது ரோகினி களத்தில் குதித்து ஆட்டையை கலைக்க போகிறார்.

அதாவது முத்து இந்த மாதிரி ஏதாவது ஒரு வேலையை பண்ணி உண்மையை கண்டுபிடித்து விடுவார் என்பதை முன்கூட்டியே உணர்ந்த ரோகினி, விஜயா மற்றும் மனோஜிடம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி சில டிப்ஸ்களையும் கொடுத்து அனைவரையும் பிரைன் வாஷ் பண்ணி விடுவார். எவ்வளவோ பார்த்த ரோகினிக்கு இதெல்லாம் ஒரு சாதாரண என்பதற்கேற்ப இதுலயும் பொய்ப்பித்தலாட்டம் பண்ணி தில்லாலங்கடி வேலையை செய்து மனோஜை காப்பாற்றி விடுவார்.

ஆனால் இதற்கு இடையில் மனோஜ் செய்த விஷயங்களை பார்க்கையில் சுருதிக்கு ஏகப்பட்ட குழப்பங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் மீனாவின் நகையை எடுத்து விற்பனை செய்த பின்பு தான் அந்த 4 லட்ச ரூபாயை கொண்டு வந்திருப்பார் என்பது சுருதி புரிந்து கொண்டார். இதைப் பற்றி ரவியிடம் சொல்லி நாம் ஏதாவது உதவி பண்ணலாமா என்று கேட்கிறார்.

அதற்கு ரவி நாம் ஏதாவது பண்ணிக் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வந்துவிடும். அதனால் அமைதியாக இரு எல்லாம் சரியாகிவிடும் என்று சுருதியை அடக்கி வைக்கிறார். ஆனாலும் சுருதிக்கு உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யார் மேலே தவறு இருக்கு என்பதை தெரிந்துகொள்ள சிஐடி வேலை பார்க்கப் போகிறார்.

ஆக மொத்தத்தில் தொடர்ந்து முத்து மற்றும் மீனா மட்டும் ஒவ்வொரு முறையும் அவமானப்பட்டு வருகிறார்கள். பொய்ப்பித்தலாட்டம் பண்ணி சந்தோசமாக இருக்கும் ரோகினி, மனோஜ் மற்றும் விஜயா யாரிடமும் மாட்டாமல் எஸ்கேப் ஆகிக்கொண்டே வருகிறார்கள்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News