செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

மனோஜிடம் பொய் சொல்லி ஹாஸ்பிடலில் தங்கும் ரோகினி.. தனியாக நிற்கப் போகும் க்ரிஷ், தத்தெடுக்கும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் அவரைப் பார்த்துக் கொள்வதற்கு ஹாஸ்பிடலுக்கு போய் விடுகிறார். போன இடத்தில் ரோகினி, அம்மா உடம்பில் இருக்கும் பிரச்சினையை தெரிந்து கொண்டு டாக்டர் அவரை முழுமையாக அப்சர்வேஷன் வைத்து பார்க்க வேண்டும். அதற்கு கூடவே ஒரு ஆள் இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.

அதனால் ரோகிணிக்கு வேற வழியில்லாமல் அம்மாவை பார்ப்பதற்கு தங்கும் படியாக சூழ்நிலை வந்து விடுகிறது. ஆனாலும் மனோஜ் போன் பண்ணி ரோகினி ஏன் இன்னும் கடைக்கு வரவில்லை என்று கேட்கிறார். என்ன சொல்வது என்று தெரியாமல் முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு என்னுடைய தோழி வீட்டுக்கு நான் போய் விடுகிறேன். நாளை தான் வருவேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

ரோகினி சொல்வதை கண்முடித்தனமாக நம்பும் மனோஜ்

அப்படி சொன்ன நேரத்தில் ரோகிணியின் தோழி, மனோஜ் ஷோரூம் கடைக்கு போய்விடுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி ஃபோன் பண்ணி என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதனால் ஹாஸ்பிடல் தங்கி நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மனோஜிடம் நான் உன்னுடன் உன் வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். உன்னிடம் ஏதாவது கேட்டால் நீயும் சமாளித்துக் கொள் என்று சொல்லும் பொழுது ரோகினின் தோழி நான் உன்னுடைய கடையில் தான் இருக்கிறேன்.

மனோஜும் என்னை பார்த்து விட்டான் என்று சொல்லும் பொழுது ரோகிணி நீ ஏதாவது சொல்லி சமாளி நான் போன் வைக்கிறேன் என்று சொல்லி வைத்து விடுகிறார். அதற்கு ஏற்ற மாதிரி மக்கு மனோஜும், ரோகிணியின் தோழியிடம் உன்னை தேடி தான் ரோகிணி உன் வீட்டிற்கு போய் இருக்கிறாள். அது தெரியாமல் நீ இங்கே வந்து விட்டாய் என்று கேட்டதும் அப்படியே சமாளித்து ரோகிணியின் தோழி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

இதற்கிடையில் முத்து, மீனா, ரவி மற்றும் சுருதி போட்ட டிராமாவை நம்பி விஜயா சந்தோஷப்பட்டு கொண்டு இனி சுருதி மற்றும் மீனா சேர்ந்து நிற்க மாட்டார்கள். அவர்களுக்குள் பிரச்சினை வந்துவிட்டது தனித்தனியாக இனி இருப்பதால் நமக்கு வேலை சுலபமாக இருக்கும் என்று தவறாக நினைத்து சந்தோஷப்படுகிறார். இது எதுவும் தெரியாதா அண்ணாமலை, முத்துவிடம் ஏன் உங்களுக்குள் இப்படி ஒரு சண்டை வந்தது.

எனக்கு அடுத்து மீனாதான் இந்த குடும்பத்தை கட்டி காப்பாள், ஒற்றுமையாக வைத்துக் கொள்வாள் என்று நினைக்கும் பொழுது இப்படி ஏன் பிரச்சனை வந்துவிட்டது என்று கேட்கிறார். அதற்கு முத்து, இதெல்லாம் நாங்கள் போடும் போலி ட்ராமா அம்மாவை ஏமாற்றுவதற்காக. ஏனென்றால் அம்மாவை பொறுத்தவரை மீனா மற்றும் சுருதி சேர்ந்து இருக்கக் கூடாது. அவர்கள் ஒற்றுமையை பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அதன்படி சுருதி அம்மாவை கூப்பிட்டு பேசி மீனாவை பற்றி தவறாக சொல்லி சுருதியை கொஞ்சம் கண்டிக்க சொல்லி இருக்கிறார். உடனே சுருதி அம்மாவும் மீனாவை பார்த்து திட்டி சண்டை போட்டு இருக்கிறார். இதை கேள்விப்பட்ட நானும் ஆரம்பத்தில் அம்மாவிடம் சண்டை போட தான் தயாராகினேன். ஆனால் மீனாதான் இந்த ஐடியாவை கொடுத்து அம்மா மனச சும்மா குளிர வைக்கலாம் என்று நினைத்து நாங்கள் போட்ட டிராமா என்று அண்ணாமலை இடம் அனைத்தையும் சொல்கிறார்.

இதை கேட்ட அண்ணாமலையும், எல்லார் வீட்டிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால் இங்கே உன் அம்மா தலைகீழாக யோசிக்கிறாள் என்று சொல்லி புலம்புகிறார். இதனை எடுத்து ரோகிணி அம்மாவுக்கு சீரியஸ் ஆக இருப்பதால் இனி தனியாக விடக்கூடாது என்று ரோகிணி முடிவு எடுக்கிறார். அதனால் கூடிய சீக்கிரத்தில் சென்னைக்கு கூட்டி வரவேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

ஆனால் அதற்குள் ரோகிணி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் பிரச்சனை வந்து கிரீஸ் தனியாக நிற்கும்படி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி என்றால் கிரஷை பார்த்துக்கொள்ள ரோகினி என்ன செய்வது என்று யோசிக்கும் அந்த தருணத்தில் முத்து மற்றும் மீனாவுக்கு க்ரிஷ் பாட்டி இறந்து போனதாக தெரிந்து விட்டதால் ஒருவேளை அவர்கள் ஆசைப்பட்டபடி கிரிசை தத்தெடுத்து வீட்டிற்கு கூட்டிட்டு வர ரோகிணி எதுவும் மறுப்பு சொல்லவும் முடியாது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News