வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Sirakadikkum Asai: மீனாவையும் சுருதியையும் பிரிக்க ஸ்கெட்ச் போடும் ரோகினி.. பாட்டியாக போகும் விஜயா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா மற்றும் முத்துவின் திருமண நாள் நிகழ்ச்சி மிகவும் சந்தோஷமாக முடிந்து விட்டது. அதற்கு காரணம் சுருதி மற்றும் பாட்டிதான். பாட்டி வந்து விட்டாலே மீனாவிற்கு கொஞ்சம் ஓய்வும், மரியாதையும் கிடைக்கும். அத்துடன் விஜயா கண்ணில் விரலை விட்டு ஆட்டும் ஒரே நபர் பாட்டி தான்.

அந்த வகையில் பாட்டி இந்த குடும்பத்திற்கு யார் முதல் வாரிசு கொடுக்கிறீர்களோ அவர்களுக்கு என்னுடைய சொத்து கொடுப்பேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த வீட்டில் ரூம் பிரச்சினை இருப்பதால் மீனா முத்துவின் தனிமையான ஒரு வாழ்க்கை பாதிப்பாக இருக்கிறது என்று பாட்டி புரிந்து கொண்டார்.

குட்டையை குழப்பம் ரோகினி

அதனால் பாட்டி இருக்கிற ரெண்டு ரூமில் ஒவ்வொரு ஜோடியும் மாத்தி மாத்தி தூங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார். முதல்ல முத்து மீனா தூங்கட்டும் என்று பாட்டி சொல்கிறார். அதன்படி முத்து மீனாவும் மனோஜ் ரூமில் தூங்குவதற்கு போகிறார்கள். ஆனால் இந்த மக்கு மனோஜ் அடிக்கடி கதவு தட்டி என்னுடைய ஜார்ஜ், பெட்ஷீட், பில்லோ என்று தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தரையில் மனோஜ் படுக்கும் பொழுது தூக்கமில்லாமல் அவஸ்தைப் படுகிறார். இதை பார்த்த ரோகினி கொஞ்சம் பொறுத்துக்கோ மனோஜ். அடுத்த வாரம் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் எப்படி என்று கேட்கும் பொழுது சுருதியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். சொகுசாக வாழ்ந்து பழகிய சுருதிக்கு தரையில் படுக்க சொல்லும் போது ஏதாவது குட்டையை குழப்புவார்.

அதன் மூலம் பிரச்சினை பூகம்பமாக வெடிக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று ரோகினி மனோஜிடம் சொல்கிறார். ஆனால் சுருதியை பொறுத்தவரை இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப ஒரு ஐடியாவை வைத்து அதன்படி சுருதி அட்ஜஸ்ட் பண்ணிக்குவார். இதனால் ரோகிணி கண்ட கனவு பலிக்காது.

அடுத்ததாக பாட்டி ஆசைப்பட்ட மாதிரி அந்த வீட்டுக்கு முதல் வாரிசாக கர்ப்பமாக போவது மீனாவாக தான் இருக்கும். முத்துவை வெறுத்தாலும் பேரன் பேத்தி என்ற வரும்பொழுது விஜயா பாட்டி என்கிற முறையில் மொத்த அன்பையும் காட்டி பாசமாக பார்த்துக் கொள்ளப் போகிறார். ஆனால் இதற்கு இடையில் ரோகிணி குடும்பத்தில் குளறுபடி பண்ணுவதற்கு பிளான் பண்ணி இருக்கிறார்.

அதாவது மீனாவிற்கு அந்த வீட்டில் அண்ணாமலைக்கு அடுத்து அதிக சப்போர்ட் பண்ணுவது ஸ்ருதி தான். அதனால் இவர்கள் இரண்டு பேரையும் முதலில் பிரித்து விட்டால் மீனாவை ஈசியாக கவுத்து விடலாம் என்று ரோகிணி நினைக்கிறார். அந்த வகையில் இருவர்களுக்கும் பிரச்சனையை உண்டாக்கி அதில் குளிர் காய நினைக்க போகிறார். ஆனால் இதற்கெல்லாம் மீனா இடம் கொடுக்க வாய்ப்பு இல்லை.

Trending News