வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பண பிரச்சனையால் முத்துவிடம் சிக்க போகும் ரோகிணி.. கொடுக்க மறுத்த மனோஜ் மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் நண்பருடைய அப்பா அம்மாவுக்கு அறுபதாவது கல்யாணத்தை பண்ணி வைப்பதற்கு பணம் இல்லாததால் குடித்துவிட்டு வேதனையில் முத்துவிடம் புலம்புகிறார்.

இதை பார்த்த முத்து பணம் தான் உனக்கு பிரச்சனை என்றால் நான் கொடுத்து உனக்கு உதவி செய்கிறேன். நீ உன்னுடைய அப்பா அம்மா அறுபதாவது கல்யாணம் நாளை சீரும் சிறப்புமாக செய்வதற்கு ஏற்பாடு பண்ணு என்று வாக்குறுதி கொடுக்கிறார்.

முத்துவிடம் சிக்கப் போகும் ரோகிணி

இதனால் முத்து, வீட்டிற்கு வந்து பணத்தை மீனாவிடம் கேட்கிறார். ஆனால் மீனா நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதுக்கு ஏத்த மாதிரி தான் செலவு செய்ய முடியும். உங்க நண்பர் ஆசைப்பட்ட மாதிரி பெருசாக பண்ண முடியலாட்டாலும் கோவிலில் வைத்து சிறப்பாக செய்து முடிக்கலாம். அதற்கு அவருக்கு ஐடியா கொடுத்துட்டு கூடவே நின்னு உதவி பண்ணுங்க.

ஆனால் அதை விட்டுவிட்டு நம்முடைய பணத்தை எடுத்துக் கொடுக்கணும் என்று எந்த அவசியமும் இல்லை. ஒரு வேலை அவர்களுக்கு மருத்துவ செலவு அல்லது வேறு முக்கியமான செலவு ஏதாவது தேவைப்பட்டால் கூட நான் நீங்கள் சொல்லாமலே பணத்தை எடுத்துக் கொடுத்து உதவி செய்வேன்.

ஆனால் மற்றவர்கள் பாராட்டுவதற்காக பெருசாக பண்ண வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு நான் பணம் தரவும் மாட்டேன் என்று கூறுகிறார். ஆனால் முத்து வலுக்கட்டாயமாக கேட்ட நிலையில் மீனா அது நானும் சேர்ந்து சம்பாதித்த பணம்தான்.

அதனால் அதை மாடியில் ரூம் கட்டுவதற்காக மட்டுமே நான் சேர்த்து வருகிறேன். இதை என்னால் எடுத்து செலவு செய்ய முடியாது என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். இதனால் முத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் ரோகிணிக்கும் ஒரு லட்ச ரூபா பணம் தேவைப்படுகிறது. கிரிஷ் மற்றும் அம்மாவை சென்னையில் இருக்கும் வீட்டில் தங்க வைப்பதற்காக வீடு பார்த்து விட்டார். ஆனால் அதற்காக அட்வான்ஸ் தொகையாக ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தனையில் ரோகிணி இருக்கிறார்.

இதை எப்படியாவது மனோஜிடம் கேட்டு வாங்கி கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் மனோஜிடம் பணம் கேட்கிறார். மனோஜ் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் பொழுது ரோகிணி தெரிந்தவருக்கு பண உதவி அவசரமாக தேவைப்படுகிறது. நான் உதவி பண்ணுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டேன்.

அதனால் எனக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் மனோஜ், நான் வைத்திருக்கும் மீதம் உள்ள பணம் கடையை அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போவதற்காக வைத்திருக்கிறேன். அதனால் தர முடியாது என்று சொல்லி விடுகிறார்.

இதனால் ஒரு லட்ச ரூபாய் பணத்துக்காக முத்து மற்றும் ரோகினி இருவரும் சேர்ந்து வட்டிக்கு கடன் வாங்கப் போகிறார்கள். அதன்மூலம் முத்துவிடம் ரோகிணி மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யாருக்கு ரோகிணி பணம் வாங்கிட்டு போகிறார் எதற்காக என்று முத்து கண்டுபிடிக்க போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News