புதன்கிழமை, ஜனவரி 1, 2025

ரோகிணி, பார்லர் அம்மா இல்ல கிரிஷ் ஓட அம்மா.. முத்துவின் அடுத்த டார்கெட், விஜயாவின் ஆட்டம் ஆரம்பம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவை பொறுத்தவரை 30 லட்சம் ஜீவாவிடம் வாங்கி மனோஜ் ஷோரூம் ஆரம்பித்தது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த விஷயத்தை விஜயாவிடம் சொல்லாமல் மறைத்து ரோகிணி, மனோஜை ஆட்டிப் படைத்தது தான் மிகப்பெரிய பிரச்சனையாக தெரிகிறது. அந்த கோபத்தை தான் ரோகினி இடம் விஜயா காட்டி வருகிறார்.

அதனால் தான் மனோஜ்க்கு எந்தவித தண்டனையும் கொடுக்காமல் முழு தண்டனையும் ரோகிணிக்கு கொடுக்கும் விதமாக அடித்து தற்போது ஒதுக்கி வருகிறார். அந்த வகையில் ஓவராக ரோகிணியை தலையில் தூக்கி வைத்து ஆடிவந்த விஜயா இப்போது ரோகிணியை இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் என்று ஒதுக்கி வைக்கிறார்.

எல்லோரும் சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது ரோகிணி ரூமுக்குள் இருந்து வெளியே தயக்கத்துடன் வருகிறார். உடனே ரவி, ரோகினி சாப்பிட கூப்பிடுகிறார். ரோகிணியும் மனோஜ் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று டைனிங் டேபிள் உட்காருகிறார். ஆனால் இதை பார்த்த விஜயா, ரோகினியை சாப்பிடக்கூடாது என்று சொல்லி எழுந்திருக்க வைத்து விட்டார்.

இதை பார்த்து யாரும் எதுவும் சொல்லாமல் இருந்தாலும் ரவி, பரவாயில்ல அண்ணி அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி, அத்தை என்னை எப்ப சாப்பிட சொல்றாங்களோ அப்பொழுதே நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று ஓரமாக ஒதுங்கி விட்டார். விஜயா ஒரு நல்ல மாமியாராகவும் இருந்ததில்லை ரோகிணி ஒரு நல்ல மருமகளாகவும் இல்லை என்பதற்கு ஏற்ற மாதிரி இரண்டு பேரும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ரோகிணி பற்றிய ஒரு விஷயம் அதுவும் மனோஜ்க்கு சாதகமாக தான் செய்திருக்கிறார் என்றாலும் இந்த அளவிற்கு விஜயா கோபப்படுகிறார் என்றால் இன்னும் எத்தனையோ விஷயங்கள் ரோகிணி மறைத்து வைத்திருக்கிறார். அதெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவந்தால் ரோகிணியின் கெதி அதோ கெதி தான். ஏற்கனவே முத்துவுக்கு ரோகிணி அப்பா மலேசியாவில் இருக்கிறாரா என்பதில் சந்தேகம் இருக்கிறது.

அதனால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் பொழுது மாமாவாக நடிக்க வந்த பிரவுன் மணி கண்ணில் சிக்க போகிறார். பிறகு அவரையும் குடும்பத்தில் முன் நிறுத்தப் போகிறார். ஆனால் அதற்கு முன் சொந்தமான பார்லர் ரோகினிக்கு கிடையாது, அங்கே வேலை பார்க்கிறார் ரோகிணி என்ற விஷயம் ஏற்கனவே முத்துவுக்கு தெரிந்தால் அதைப் பற்றியும் சொல்லப் போகிறார். அடுத்ததாக கிரிஷ் ஓட அம்மா என்கிற விஷயமும் தெரிய வரப்போகிறது.

இதெல்லாம் ஒவ்வொன்றாக தெரிய வரும் பொழுது தான் விஜயாவின் ஆட்டமே ஆரம்பம் என்பதற்கு ஏற்ப ரோகினி மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார். அதுவும் கூடிய விரைவில் நடக்கப்போகிறது என்பதற்கு ஏற்ப ஒவ்வொன்றாக வெளிவரப் போகிறது.

Trending News